பிரட்வால் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் நூற்றாண்டு விழா

0

பிரட்வால் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் முன்னாள் மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் ஆசிரியர்களின் ஒத்துழைப்போடு அண்மையில் நூற்றாண்டு விழா மிக விமரிசையாக பிரட்வால் தோட்ட விளையாட்டு உள்ளரங்கில் நடைபெற்றது.
நூற்றாண்டு விழாவினை சிறப்பு செய்யும் வண்ணம் நெகிரி மாநில துணை சபாநாயகரும், ஸ்ரீ தஞ்சோங் சட்டமன்ற உறுப்பினருமான எம்.ரவி வருகை தந்து சிறப்புரை ஆற்றி விழாவினை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார். நம் தமிழ்ப்பள்ளிகளின் நிலைமைகள், தமிழ்மொழியின் முக்கியத்துவத்தையும் உணர்த்தி நாம் வாழ நம் இனம் வாழ தமிழ்மொழியே நம் தேர்வு, தமிழ்ப்பள்ளியே நமது தேர்வாகட்டும் என்றும் அவர் தெரிவித்தார். கல்வி அமைச்சின் ஆயினர் பிரிவு உதவி இயக்குநராகப் பணிபாற்றி வரும் பிரட்வால் தமிழ்ப்பள்ளியின் முன்னாள் மாணவர் அ.செல்வேந்திரன் தமது கால தோட்டப்புற வாழ்க்கையின் நிலைமை பற்றியும் தோட்டத் தமிழ்ப்பள்ளியில் தாம் பயின்ற காலத்தில் நிலைகளைப் பற்றியும் எடுத்துரைத்தார். பள்ளியின் மூத்த முன்னாள் மாணவர் கே. பாலன் தமிழ் மலர் பத்திரிகை வாயிலாக வெளி வந்த செய்தி அறிந்து அவர் தம் மனைவியோடும் பள்ளியின் பள்ளியிண்ம் முன்னாள் மாணவியான அவரது தங்கை தேவகி பட்டணத்திலிருந்து வந்து கலந்து கொண்டு சிறப்பித்தார்.
நூற்றாண்டு விழாவிளை நிறைவு செய்த மனித வளம் தோட்டப் புறம் மற்றும் இஸ்லாம் அல்லாத விவகாரங்களுக்கான நெகிரி மாநில அரசு நடவடிக்கைக் குழுத் தலைவரும் நீலாய் சட்டமன்ற உறுப்பினருமான ஜ. அருள்குமார் தமிழ்ப்பள்ளிகளுக்கு அரசாங்கம் என்றென்றும் துணையாக இருக்கும் என்றும், தமிழ்ப்பள்ளிகளின் நிலை குறித்து நம் சமுதாயத்தின பங்களிப்பின் முக்கியத்துவத்தையும் நாட்டின் நிலைமை குறித்தும் நன்கு விளக்கி நூற்றாண்டு விழாவினை நிறைவு செய்தார். பிரட்வால் தோட்டத் தமிழ்ப் பள்ளியின் முன்னாள் மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் ஆசிரியர்களின் ஒத்துழைப்போடு அண்மையில் நூற்றாண்டு விழா மிக விமரிசையாக பிரட்வால் தோட்ட விளையாட்டு உள்ளரங்கத்தில் நடைபெற்றது. இந்த தோட்டத்தில் பிறந்து வளர்ந்து ஒன்று கூடி விளையாடி இந்தப் பள்ளியில் படித்து மகிழ்ந்த அந்த நினைவுகளை மனதில் நிறுத்தினால் அந்த பள்ளி பருவ கால நினைவுகள் என்றென்றும் நம் மனதை விட்டு நீங்காதவை என்றார். பல மாத முயற்சிக்குப் பிறகு அனைவருடைய அயராத உழைப்பும் விடா முயற்சியும் தான் இந்த நூற்றாண்டு விழாவை ஏற்பாடு செய்ய முடிந்தது என்றார். நூற்றாண்டு விழாவினை சிறப்பு செய்யும் வண்ணம் நெகிரி மாநில துணை சபாநாயகரும், ஸ்ரீ தஞ்சோங் சட்டமன்ற உறுப்பினருமான எம்.ரவி வருகை தந்து சிறப்புரை ஆற்றி விழாவினை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார்.
நம் தமிழ்ப்பள்ளிகளின் நிலைமைகள், தமிழ் மொழியின் முக்கியத்துவத்தையும் உணர்த்தி நாம் வாழ நம் இனம் வாழ தமிழ்மொழியே நம் தேர்வு. தமிழ்ப்பள்ளியே நமது தேர்வாகட்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
கல்வி அமைச்சின் ஆயினர் பிரிவு உதவி இயக்குநராக பணியாற்றி வரும் பிரட்வால் தமிழ்ப்பள்ளியின் முன்னாள் மாணவர் அ.செல்வேந்திரன் தமது கால தோட்டப்புற வாழ்க்கையின் நிலைமையைப் பற்றியும் தோட்ட தமிழ்ப்பள்ளியில் தாம் பயின்ற காலத்தில் நிலைகளைப் பற்றியும் எடுத்துரைத்தார். பள்ளியின் மூத்த முன்னாள் மாணவர் கே. பாலன் தமிழ் மலர் பத்திரிகை வாயிலாக வெளி வந்த செய்தி அறிந்து அவர் தம் மனைவியோடும் பள்ளியின் முன்னாள் மாணவி அவரது தங்கை தேவகி உடன் கிள்ளான் பட்டனத்திலிருந்து வந்து கலந்து கொண்டு சிறப்பித்தார்.
முன்னாள் மாணவி ச. கமலம் (சிரம்பான்) முன்னாள் மாணவி ப. விஜயா (ஜொகூர்), முன்னாள் மாணவர் எம். ராஜு (கோலாலம்பூர்) மற்றும் அநேகர் பல இடங்களில் இருந்து வந்து கலந்து கொண்டு உரையாற்றி சிறப்பித்தனர்.
நூற்றாண்டு விழாவினை நிறை செய்த மனித வளம், தோட்டப் புறம் மற்றும் இஸ்லாம் அல்லாத விவகாரங்களுக்கான நெகிரி மாநில அரசு நடவடிக்கைக் குழு தலைவரும் நீலாய் சட்டமன்ற உறுப்பினருமான ஜ. அருள்குமார் தமிழ்ப்பள்ளிகளுக்கு அரசாங்கம் என்றென்றும் துணையாக இருக்கும் என்றும். தமிழ்ப்பள்ளிகளின் நிலை குறித்தும் நம் சமுதாயத்தின் பங்களிப்பில் முக்கியதுதுவத்தையும் நாட்டில் நிலைமையைக் குறித்து நன்கு விளக்கி நூற்றாண்டு விழாவினை நிறைவு செய்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

eleven − 8 =