‘பிரசாரானா – எம்ஏஎச்பி அதிகாரிகளை போக்குவரத்து அமைச்சு நியமிக்க இயலாது’

0
Interview with Rafizi Ramli, Thursday, September 13, 2018. RAJA FAISAL HISHAN/The Star.

பிரசாரானா மலேசியா சென்டிரியான் பெர்ஹாட் மற்றும் மலேசிய ஏர்போர்ட் ஹோல்டிங்ஸ் சென்டிரியான் பெர்ஹாட்டின் (எம்ஏஎச்பி) தலைமை செயல்முறை அதிகாரிகளைத் தேர்ந் தெடுப்பது போக்குவரத்து அமைச்சின் அதிகாரத்திற்கு உட்பட்டது அல்ல என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் சியூ ஃபூக் கூறினார்.
நிதியமைச்சு வாரியத்தின் கீழுள்ள ஒரு நிறுவனமாக பிரசாரானா திகழ்கிறது. எம்ஏஎச்பியின் ஒரு பகுதி கஸானா நேஷனல் பெர்ஹாட் வசம் உள்ள வேளையில், மற்றொரு பகுதி மலேசிய பங்கு பரிவர்த்தனையில் இடம் பெற்றுள்ளது. நிதியமைச்சு வாரியத்தின் கீழ் உள்ளதால் பிரசாரானாவின் தலைமை செயல்முறை அதிகாரியைத் தேர்வு செய்யும் அதிகாரம் போக்குவரத்து அமைச்சிற்கு கிடையாது. அதே நிலைதான் எம்ஏஎச் பிக்கும். ஆகையால் இந்த நிறுவனங்களின் தலைமைச் செயல்முறை அதிகாரியை நியமிப்பது குறித்து இயக்குநர் வாரியமே முடிவு செய்ய வேண்டும் என்றார் அந்தோணி லோக்.
பிரசாரானாவின் தலைமைச் செயல்முறை அதிகாரியாக கடந்த 3 செப்டம்பர் 2018இல் நியமனம் செய்யப்பட்ட முகமட் ஹஸ்வான் முகமட் ஹுசேனை அந்நிறுவனத்தின் இயக்குநர் வாரியம் பதவி நீக்கம் செய்துள்ளது என்று ஊடகச் செய்திகள் அறிவித்துள்ளன.
இதற்கிடையில் டத்தோ முகமட் ஷுக்ரி முகமட் சாலேஹ் தமது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக கடந்த திங்கள் கிழமையன்று எம்ஏஎச்பி அறிவித்து இருந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

five × 3 =