பிரசாரனா தலைவராக முன்னாள் தலைமை நீதிபதி ஸஹாரா நியமனம்

0

அரசாங்கம் தொடர்புடைய பொது போக்குவரத்து நிறுவனமான பிரசாரனா குழுமத்தின் தலைவராக மலாயா முன்னாள் தலைமை நீதிபதி டான்ஸ்ரீ ஸஹாரா இப்ராஹிம் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நியமனம் நேற்று தொடங்கி அமலுக்கு வந்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் 17ஆம் தேதி ராஜினாமா செய்த டான்ஸ்ரீ காலிட் அபுபக்காரின் இடத்தை நிரப்புவதற்காக இந்த நியமனம் நடைபெற்றுள்ளது என்று பிரசாரனா வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
1952இல் ஜொகூர் பாருவில் பிறந்த ஸஹாரா மலாயா பல் கலைக்கழகத்தில் சட்டத்துறையில் பட்டம் பெற்றவராவார். 1977ஆம் ஆண்டு ஏப்ரல் தொடங்கி சட்டம் மற்றும் நீதித்துறையில் அவர் சேவையாற்றியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

15 − ten =