பிபிஆர் வீடமைப்புத் திட்டங்களில் போலீஸார் அமர்த்தப்படுவதை பரிசீலிக்க வேண்டும்

0

மக்கள் வீடமைப்புத் திட்டங்களில் (பிபிஆர்) போலீஸ்காரர்களை அமர்த்தும் பரிந்துரை, அமலாக்கத்துக்கு முன்பாக நன்கு பரிசீலனை செய்யப்பட வேண்டும் என பினாங்கு ஆட்சிக்குழு உறுப்பினர் ஜக்டிப் சிங் டியோ கூறினார்.
இது இந்தப் பகுதிகளில் வாழும் மக்கள் போலீஸ் கண்காணிப்பின் கீழ் தாங்கள் வைக்கப்படுகின்றோம் என்ற தோற்றத்தை ஏற்படுத்தக்கூடும் என்றார் அவர்.
பிபிஆர் வீடமைப்புத் திட்டங்களில் வசித்துவருவோர் அனைவருமே குற்றச்செயல்கள் புரிபவர்கள் அல்லர் என்பதை நாம் உணர வேண்டும். இந்தத் திட்டங்களில் நல்லவர்களும் வசித்து வருகின்றனர்.
இந்தத் திட்டங்களில் வாழ்பவர்கள் ஏழைகள். இங்கு போலீஸ்காரர்கள் அமர்த்தப்படுவது எதிர்மறையான தோற்றத்தை ஏற்படுத்தக்கூடும் என அவர் சுட்டிக்காட்டினார்.
பிபிஆர் திட்டங்களில் அதிகமான குற்றச்சம்பவங்கள் நடந்து வருவதை மறுப்பதற்கில்லை. இந்த விவகாரத்தைக் கையாள வேறு வழிகள் இல்லை என பினாங்கு மாநில வீடமைப்பு ஊராட்சி மன்றம் மற்றும் நகர்ப்புறத் திட்டக் குழுவின் தலைவருமான ஜக்டிப் தெரிவித்தார்.வீடமைப்பு மற்றும் ஊராட்சித்துறை அமைச்சு ஒரு சமூக அதிகாரமளித்தல் செயலகத்தை அறிமுகம் செய்து இப்பிரச்சினைக்குத் தீர்வு காணலாம் என்றார் அவர்.
இந்த செயலகம் பிபிஆர் திட்டங்களில் நிரந்தரமாக இருக்க வேண்டும். 3 அல்லது 4 அதிகாரிகளை இந்தச் செயலகத்தில் வேலைக்கு அமர்த்தலாம்.
இத்திட்டங்களில் வாழும் மக்களுடன் இந்த அதிகாரிகள் சந்திப்பு நடத்தி பிரச்சினைகளைக் கையாளலாம் என அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here