பிபிஆர் பகுதிகளில் போலீசார் நிறுத்தப்படுவர்

0
File Pic

கூட்டரசு பிரதேசத்தில் உள்ள 15 மக்கள் வீடமைப்புத் திட்டப் பகுதிகளில் போலீஸ் அதிகாரிகள் நிறுத்தப்படுவர் என கோலாலம்பூர் காவல்படைத் தலைவர் டத்தோஸ்ரீ மஸ்லான் லாஸிம் கூறினார்.
இந்தப் பகுதிகளில் குற்றச்செயல்கள் அதிகரித்து வருவதால் அவற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் இம்முடிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
பிபிஆர் வீடமைப்புத் திட்டப் பகுதிகளிலுள்ள சில வீடுகளில் போலீஸ்காரர்கள் தங்கி தங்களுடைய கடமைகளில் ஈடுபடுவர் என அவர் சொன்னார்.
இதன் முதல்கட்டமாக போலீஸ்காரர்களுக்கு பிபிஆர் மக்கள் வீடமைப்புத் திட்டப் பகுதியிலுள்ள வீடுகளில் 27 வீடுகள் வழங்கப்படும் என அவர் தெரிவித்தார்.
பிபிஆர் ஸ்ரீ சிலாங்கூர், பிபிஆர் ஸ்ரீ அலாம், பிபிஆர் ஸ்ரீ சபா, பிபிஆர் புக்கிட் ஜாலில், பிபிஆர் டேசா துன் ரசாக், பிபிஆர் ஸ்ரீ பந்தாய், பிபிஆர் பந்தாய் ரியா, பிபிஆர் கோம்பாக் செத்தியா, பிபிஆர் ஸ்ரீ செமாராக், பிபிஆர் டேசா ரெஜாங், பிபிஆர் ஆயர் பனாஸ், பிபிஆர் வாயு, பிபிஆர் பெரிங்கின், பிபிஆர் இந்தான் பைடூரி மற்றும் பிபிஆர் கம்போங் பத்து மூடா ஆகிய 15 வீடமைப்புப் பகுதிகள் இதில் அடங்கும் என்றார் அவர்.
இந்த விவகாரத்தில் கோலாலம்பூர் மாநகர் மன்றம், இதர நிறுவனங்களுடன் போலீஸ் அணுக்கமாக ஒத்துழைத்து வருவதாக அவர் சொன்னார்.
போலீஸ்காரர்கள் இந்தப் பகுதிகளில் பணிக்கு அமர்த்தப்படுவதால் அங்கு நடக்கும் குற்றச்செயல்களை இப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் நேரடியாக போலீஸாருக்கு தகவல் தர முடியும் என அவர் தெரிவித்தார்.
இந்தத் திட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் என டத்தோஸ்ரீ மஸ்லான் லாஸிம் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

five + fifteen =