பினாங்கு லிட்டல் இந்தியாவில் சுதந்திர தினக் கொண்டாட்டம்

பினாங்கு மாநிலத்தில் இந்திய வியாபாரிகள் பெருமளவில் வியாபாரம் செய்யும் இடமாகக் கருதப்படும் லிட்டல் இந்தியா பகுதி சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் திளைத்தது.
பினாங்கு மாநில லீகா முஸ்லிம் சங்கத்தின் ஏற்பாட்டில் லிட்டல் இந்தியா பகுதிகளில் தேசியக் கொடியை பறக்கவிடும் கொண்டாட்ட நிகழ்வுகள் ஆரம்பமாகியதாக பினாங்கு லீகா முஸ்லிம் இயக்கத்தின் தலைவர் டத்தோ நஜிமுடின் காடிர் கூறினார்.
கோவிட்-19 நோய்த் தொற்று காரணமாக தேசிய தினக் கொண்டாட்ட நிகழ்வுகள் ரத்து செய்யப்பட்டாலும் தேசிய தினத்தை எழுச்சியுடனும் தேசப் பற்றுடன் கொண்டாட லீகா முஸ்லிம் வெ 2,000 செலவு செய்ததாகவும்,தேசியக் கொடிகளை பறக்கவிடும் நாள் மலேசிய தின நாளான செப்டம்பர் 16 வரை தொடரும் எனவும் அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

nineteen + seven =