பினாங்கு முதல்வரின் சீனப் புத்தாண்டு திறந்த இல்ல உபசரிப்பு

சீனப்புத்தாண்டை முன்னிட்டு பினாங்கு முதல்வர் சௌ கோன் இயோவின் திறந்த இல்ல உபசரிப்பு பாயான் பாருவில் அமைந்துள்ள ஸ்பைஸ் அரேனா அரங்கில் அண்மையில் சிறப்பாக நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் பினாங்கு மாநில ஆளுநர் துன் டத்தோஸ்ரீ உத்தாமா அப்துல் ரஹ்மான் ஹாஜி அப்பாஸ் தம்பதியருடன், மாநில துணை முதல்வர்கள் டத்தோ ஹாஜி அக்மாட் ஸக்கியுடின், பேராசிரியர் பி.இராமசாமி, ஜசெகவின் மூத்த அரசியல்வாதிகள், மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்கள், அரசு பணியாளர்கள், பொதுமக்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து சிறப்பித்தனர்.
இந்திய தலைவர்கள் சார்பில் பினாங்கு குற்றத்தடுப்பு அறவாரியத்தின் துணை தலைவர் டத்தோ க.புலவேந்திரன், டத்தோஸ்ரீ ஆர்.அருணாசலம், டத்தோ மரியதாஸ், பத்து உபான் சட்ட மன்ற உறுப்பினர் எம்.குமரேசன், பத்து கவான் நாடாளுமன்ற உறுப்பினர் கஸ்தூரி பட்டு, டத்தோஸ்ரீ சுப்பையா மாணிக்கம் உள்ளிட்ட இஸ்லாமிய அரசு சாரா இயக்கத் தலைவர்களும் இந்நிகழ்ச்சியில் கலந்து சிறப்பித்தனர்.
நிகழ்ச்சியின் தொடக்க அங்கமாக வருகையாளர்களுக்கும் சிறுவர்களுக்கும் முதல்வர் ஆரஞ்சு பழங்களையும் பண அன்பளிப்புகளையும் எடுத்து வழங்கினார். சிறப்பு வருகையாளர்களை ஒன்றிணைத்து திறந்த இல்ல உபசரிப்பினை தொடக்கி வைக்க பல்வகை உணவுகளை கிளறும் நிகழ்வான இசாங் நிகழ்வை நடத்தினர். அனைவரின் வாழ்விலும் செல்வ செழிப்பு, நீடித்த பொருளாதார வளர்ச்சி கொள்ள வேண்டும் என்ற உயரிய சிந்தனையில் சீன புத்தாண்டு வாழ்த்துகளை அனைவரும் பரிமாறிக்கொண்டனர்.
சீனர்களின் பாரம்பரிய நடனம், சிங்க நடனம் மற்றும் பழங்குடியினரின் சிறப்பு நடனத்துடன், மேஜிக் ஷோ உள்ளிட்ட ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் கலந்துகொண்ட வருகையாளர்களை வெகுவாக கவர்ந்தன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

7 + 11 =