பினாங்கு மாநில சுதந்திர மாத கொண்டாட்டம்

0

பினாங்கு மாநில அளவிலான 2020 ஆம் ஆண்டுக்கான தேசிய சுதந்திர தின கொண்டாட்டத்தின் தொடக்க விழாவை பினாங்கு மாநில முதலமைச்சர் சௌ கோன் இயோவ் அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார்.
சுதந்திர மாத தினத்தில் ஜாலுர் கெமிலாங் தேசியக் கொடியைப் பறக்கவிடும் நிகழ்வான இந்த தொடக்க விழா இங்குள்ள சுல்தான் அப்துல் ஹாலிம் முவாட்சாம் ஷா பினாங்கு 2ஆவது பாலத்தில் உள்ள டோல் சாவடியில் நடைபெற்றது.
முதலமைச்சர் சௌ கோன் இயோவ் தமதுரையில்,இந்த சுதந்திர மாத தொடக்க விழா வரலாற்றுப் பூர்வமானது எனவும் இவை மத்திய அரசாங்கம் மாநில அரசாங்கங்களின் பங்களிப்பின் மூலமாக நடைபெறுவது சிறப்புக்குரியது எனத் தெரிவித்தார்.
கோவிட்-19 நோய் தொற்று மக்களை அச்சுறுத்தினாலும்,அரசு நிர்ணயம் செய்துள்ள கட்டுப்பாடுகளைக் கடைப்பிடித்து இந்நிகழ்வுகளை நடத்துவதன் மூலமாக மக்களிடையே தேசப் பற்று என்றுமே குறையவில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.
முதல்வர் சௌ தேசியக் கொடியை வாகனங்களுக்கு அணிவித்து சுதந்திர மாத தொடக்க விழாவில் வாகன அணிவகுப்பைத் தொடக்கி வைத்தார்.
பல கட்டுப்பாடுகளைக் கடந்து தேசிய தின விழாவை நடத்த வேண்டிய கட்டாயம் இருப்பினும் இதனை நடத்துவதில் ஏற்பட்டுள்ள சாத்தியத்தை நாம் அனைவரும் ஒன்றிணைந்து கொண்டாடுவதன் மூலமாக மன மகிழ்ச்சி அளிப்பதாக முதல்வர் சௌ பெருமிதம் கொண்டார்.
பரிவுமிக்க மலேசியா எனும் கருப்பொருளில் இவ்வாண்டுக்கான தேசிய தின விழா கொண்டாட்டங்கள் நடைபெறுவதால் சுதந்திர நினைவலைகளுடன் முன்னேற்றப் பாதையை நோக்கிய சிறந்த அடைவு நிலையை நாடு அடையுமென அனைவரின் எதிர்பார்ப்பாக அமைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
நாட்டுப் பற்றை வெளிப்படுத்த தேசியக் கொடியைப் பறக்கவிடும் கடப்பாட்டை அரசாங்கமும் நாட்டு மக்களும் கொண்டுள்ளனர். அதன் மூலமாக நமது நாட்டின்
சுதந்திர வரலாற்றில் சீரிய சிந்தனை ஆற்றல்
மேலோங்கி நமது நாட்டு சுதந்திரம்,அமைதி மற்றும் வளப்பம் ஆகியவற்றை மேலும் பேணிக்காக்கும்
ஆற்றல் மக்களிடையே மேலோங்கும் என முதலமைச்சர் நம்மிக்கை தெரிவித்தார். இந்த சுதந்திர மாத தேசியக்கொ டியை பறக்கவிடும் நிகழ்வில் பினாங்கு மாநில சபாநாயகர் லாவ் சூ கியாங்,பினாங்கு துணை முதலமைச்சர் பேராசிரியர் இராமசாமி மற்றும் மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து சிறப்பித்தனர்.
இந்த சுதந்திர தினக் கொண்டாட்டத்துக்கு மலேசிய தகவல் அமைச்சு இணை ஆதரவைத் தெரிவித்துள்ளதுடன்,பல்வகை நிகழ்வுகள் ஜூலை மாதம் 16 ஆம் நாள் தொடக்கம்
ஆகஸ்ட் 30 ஆம் நாள் வரை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

five − 1 =