பினாங்கு மாநில இந்திய மறுமலர்ச்சி இயக்கம் மூலம் சமூக மாற்றம் காண்போம்

நாட்டின் வளர்ச்சிக்கு ஏற்ப,இந்திய சமூதாய மறுமலர்ச்சி பெறும் நோக்கத்தில் மகத்தான இயக்கம் அமைந்துள்ளது. அதன் தோற்றுநர் ஓம்ஸ்.பா.தியாகராஜன் எண்ணத்தில் உதித்த மலேசிய இந்தியர்கள் மறுமலர்ச்சி இயக்கத்திற்கு (அரிமா) தோள் கொடுத்து வெற்றிகாண பினாங்கு மாநில இந்திய மறுமலர்ச்சி இயக்கம் என்றும் தயார் நிலையில் இருக்கும் என்று அதன் தலைவர் டத்தோ ஹென்றி பெனடிக் ஆசீர்வாதம் கூறினார்.
கடந்த 18.9.2020 ஆம் நாள் பினாங்கு மாநிலத்தில் இயக்கத்தின் அதிகாரப்பூர்வமாக அறிமுக விழா நடத்தப்பட்டு தற்போதைய நிலையில் இவ்வியக்கத்தில் பலரும் இணைந்து சமூதாய சேவை ஆற்ற எண்ணியுள்ள நிலையில்,இவ்வியக்கத்தின் மிகப்பெரிய நோக்கமாக கருதப்படும் சமூக உருமாற்றத்தில் கலந்துகொண்டு பல நல்ல திட்டங்களை மக்களுக்கு வழங்கத் தயாராக இருப்பதாக அவர் மேலும் கூறினார்.
பினாங்கு மாநிலத்தில் நடந்த இந்திய மறுமலர்ச்சிக் கூட்டத்தில் எழுச்சி உரையாற்றிய ஓம்ஸ்.பா.தியாகராஜன் இவ்வமைப்பின் தோற்றத்துக்கான காரணமாவார். அதன் செயல் திட்டங்கள் தெளிவான முறையில் விளக்கம் அளிக்கப் பட்டுள்ளதுடன்,தம் மீது நம்பிக்கை கொண்டு பினாங்கு மறுமலர்ச்சி இயக்கத்துக்கு தலைமையேற்க அழைப்பு விடுத்ததற்கு தமது நன்றியை தெரிவித்துக்கொள்வதாக டத்தோ ஹென்றி கூறினார்.
இம்மாதம் பொதுக்கூட்டம் ஒன்றை மாநில இந்திய மறுமலர்ச்சி வாயிலாக நடத்த திட்டம் வகுக்கப்பட்ட நிலையில் கோவிட்-19 தொற்று காரணமாக சில நடவடிக்கைகள் மாற்றம் செய்யப்பட்டு கூடிய விரைவில் அக்கூட்டங்களை நடத்த எண்ணம் கொண்டுள்ளதாக கூறிய அவர் இயக்கத்துக்கான புதிய உறுப்பினர்களை இணைக்கும் பணிகள் தொடங்கப்பட்டு வருவதாக கூறினார்.
பினாங்கு தீவு மற்றும் செபெராங் பிறை மாவட்டங்களில் இந்திய மறுமலர்ச்சி இயக்கத்தின் நிகழ்ச்சிகளை நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதுடன் தமிழ்ப்பள்ளிகளின் வளர்ச்சிக்கு மற்றும், பள்ளி மாணவர்களின் முன்னேற்றத்துக்கான நிகழ்ச்சிகளை நடத்தவும் மாநில மறுமலர்ச்சி இயக்கம் திட்டமிட்டுள்ளது என டத்தோ ஹென்றி பெனடிக் ஆசீர்வாதம் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

12 − seven =