பினாங்கு பேருந்து விபத்து

வியாழக்கிழமை மாலை மணி 6.30 மணியளவில் 5 வாகனங்களை உள்ளடக்கிய பேருந்து விபத்தில் கைது செய்யப்பட்டிருந்த பேருந்து ஓட்டுனர் போதைப்பொருள் உட்கொண்டிருந்ததாக நேற்று மாலை தெரிய வந்துள்ளது என்று தென்மேற்கு மாவட்ட காவல் துறை தலைவர் சூப்பிரிண்டன் அ.அன்பழகன் தெரிவித்தார்.
49 வயதான அந்த இந்திய பேருந்து ஓட்டுனர் பேருந்து ஓட்டும் உரிமத்தையும் கொண்டி ருக்கவில்லை. அந்த ஓட்டுனரின் சிறுநீரைப் பரிசோதித்து பார்த்ததில் அவர் மெத்தாம் பெத்தமின் வகை போதைப்பொருளை உட்கொண்டுள்ளார் என கண்டு பிடிக்கப்பட்டது என மேலும் அவர் தெரிவித்தார்.
நேற்று பாலிக் பூலாவில் உள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட அந்த பேருந்து ஓட்டுனரை, காவல் துறையினர் இருநாட்கள் தடுப்பு காவலில் வைத்து விசாரணை நடத்த நீதிபதி அக்மாட் தாஜுடின் சாயின் உத்தரவிட்டார்.
ஆரம்பகட்ட விசாரணையில் பேருந்தின் பிரேக் செயலிழந்து விட்டதாக கூறப்பட்டது. இவ் விபத்தில் 16 வயது மோட்டார் சைக் கிளோட்டி சம்பவ இடத்திலேயே மரணமடைந்த வேளையில் ஒரு பெண் மற்றும் அவரது 2 பிள்ளைகளும் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

3 × four =