பினாங்கு துணை முதல்வர் ராமசாமியிடம் 3 மணிநேரம் விசாரணை

0

பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் பி.ராமசாமி நேற்று புக்கிட் அமான் காவல்துறை தலைமையகத்துக்கு வரவழைக்கப்பட்டு 3 மணிநேரத்திற்கும் காவல்நிலையம் வந்த அவர் விசாரணைக்குப் பின்னர் வெளியேறினார். கடந்த செப்டம்பர் 17ஆம் தேதி பத்து ஆராங் துப்பாக்கிச் சூடு பற்றி தாம் எழுதிய ஒரு கட்டுரை தொடர்பாகவும் நான் அமைதி பணியாளர் தீவிரவாதியா என்ற தலைப்பில் கடந்த செப்டம்பர் 2ஆம் தேதி எழுதிய ஒரு கட்டுரை தொடர்பாகவும் தாம் விசாரிக்கப்பட்டதாக அவர் கூறினார். மேலும் கடந்த 2010ஆம் ஆண்டு கோலாலம்பூரில் தாம் சீமானை வரவேற்றுப் பேசிய ஒரு காணொளியையும் இலங்கைப் போருக்குப் பின்னர் சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் நான் பேசிய ஒரு வீடியோ காணொளியையும் என்னிடம் காட்டினார்கள். இந்த 2 அம்சங்களிலும் நான் சொன்ன கருத்தில் உறுதியாக இருக்கிறேன்.

எனினும் அந்த வீடியோ காணொளி குறித்து ஏற்கெனவே நான் புகாரும் செய்திருக்கிறேன். என்னைத் தவறாகக் காட்டும் காணொளி அது. ஒரு மக்கள் பிரதிநிதி என்ற முறையில் இந்த நாட்டில் இனங்களுக்கிடையிலான அமைதியையும் நல்லிணக்கத்தையும் நான் காக்க வேண்டியது என் கடமையாக இருக்கிறது. ஸக்கீர் நாயக் போன்றவர்கள் தூண்டி விட்டு குளிர்க்காய நான் விடமாட்டேன்.

என்னைப் பொறுத்தவரை ஸக்கீர் நாயக் மீது எனக்கு தனிப்பட்ட விரோதம் கிடையாது. ஆனால் இந்த நாட்டில் இவவாகத்தை அவர் தூண்டுவதை நான் அனுமதிக்கமாட்டேன் என்றார் அவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

17 + eight =