பினாங்கு சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் முயற்சியில் மலேசிய ஏர்லைன்ஸ்

மலேசிய ஏர்லைன்ஸின் பினாங்கு சுற்றுலாத் துறையுடன் இணைந்து, ‘பினாங்கை ரசிப்போம்’ எனும் பிரசாரத்தை தொடங்கியுள்ளது. இது சுட்டி-சுட்டி மலேசியாவுடன் இணைந்து வாடிக்கையாளர்களுக்கு பினாங்கில் உள்ள ஹோட்டலுடன் விமானக் கட்டணங்களை சிறந்த விலையில் வழங்க மலேசிய ஏர்லைன்ஸும் பினாங்கு சுற்றுலாத் துறையும் முடிவு எடுத்துள்ளது.
புதிதாக தொடங்கப்பட்ட இப்பிரசாரம் உள்நாட்டு பயணங்களை மேம்படுத்துவதிலும் பினாங்கு சுற்றுலாத் துறையை வளர்ச்சி அடைய செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
குறிப்பாக மக்கள் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் (எம்.சி.ஓ) மீட்புக் கட்டத்தைத் தொடர்ந்து, நாட்டின் சுற்றுலாத் துறையை மேம்படுத்தவும் பொருளாதாரத்தை உயர்த்தவும் மலேசிய ஏர்லைன்ஸ் இதுபோன்ற நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.
இவ்வாண்டு டிசம்பர் 31 வரை பயணத்திற்காக வாடிக்கையாளர்கள் இப்போது முதல் நவம்பர் 31, 2020 வரை பதிவு செய்யலாம்.
இப்பிரசாரத்தின் கீழ் உடனடியாக பதிவு செய்யும் முதல் 10 வாடிக்கையாளர்களுக்கு 60 சதவீதம் வரை தள்ளுபடியும் வழங்கப்படும்.
வாடிக்கையாளர்கள் இந்த சிறப்புத் தள்ளுபடிகளுடன் 3-நாள் மற்றும் 2-இரவுகள் ஹோட்டல் வசதிகளுடன் மலேசிய ஏர்லைன்ஸ் விமான டிக்கெட்டுகளை குறைந்த விலையில் அனுபவிக்கலாம்.
கூடுதலாக, ஒவ்வொரு பினாங்கு தொகுப்புக்கும், பயணிகள் பினாங்கு வெப்பமண்டல மசாலா தோட்டம், வெப்பமண்டல பழங்கள் பண்ணை, பினாங்கு பட்டாம்பூச்சி பண்ணை, தி டாப், பினாங்கு பறவை பூங்கா போன்ற இடங்களுக்கு செல்ல இலவச வவுச்சர்களைப் பெறுவார்கள்.
மலேசிய ஏர்லைன்ஸின் சந்தைப்படுத்தல் பிரிவின் தலைவர் லா யின் மே கூறுகையில், “அழகிய தீவுகள், அழகிய கடற்கரைகள் மற்றும் தனித்துவமான இடங்களை ரசிக்க வாடிக்கையாளர்களுக்கு இது ஓர் அரிய வாய்ப்பு. பல மலேசியர்களுக்கு பினாங்கு எப்போதும் ஒரு பிரபலமான விடுமுறை இடமாக உள்ளது” என்றார் அவர்.
“அவற்றின் தனித்துவமான கலாசார மற்றும் கட்டடக்கலை பண்புகள் காரணமாக அவை தென்கிழக்கு ஆசியா பிராந்தியத்தில் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாக விளங்குகின்றது.
“இந்த பிரசாரம் உள்ளூர் விமானத் துறைகளையும் உள்ளூர் சுற்றுலாத் துறையையும் மேம்படுத்த எடுக்கப்பட்ட முயற்சியாகும். அது மட்டுமல்லாமல், மலேசிய ஏர்லைன்ஸுடன் பயணிக்கும் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய மலேசிய ஏர்லைன்ஸ் பல சுகாதார நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது” என்றார் அவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

three × four =