பினாங்கு காபி கடைகளுக்கு உதவுகின்றது கார்ல்ஸ்பெர்க் நிறுவனம்

0

கோவிட்-19 தாக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ள பினாங்கு வணிகங் களுக்கு உதவும் வகையில் மலேசியா கார்ல்ஸ்பெர்க் ‘சேவ் டுகெதர்’ (ளுயகந கூடிபநவாநச) எனும் புதிய பிரசாரத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
நடமாட்டக் கட்டுப்பாடு ஆணை காலகட்டத்தில் காபி கடைகள் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பும் நிலையில் ரிம 3.5 மில்லியனை ஒதுக்கியுள்ளதாக மலேசியா கார்ல்ஸ்பெர்க் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த திட்டத்தின் மூலம் அனைத்து காப்பி கடைகளும் ஒவ்வொரு 580 மில்லி லிட்டர் காப்பிக்கு ரிம0.50 கூடுதல் லாபத்தைப் பெறுவார்கள். மேலும், சிங்கப்பூர் காப்பி கடை உரிமையாளர்கள் சங்கத்துடன் இணைந்து மலேசியா நாடு முழுவதும் 1,000 சிறு மற்றும் நடுத்தர அளவிலான காப்பி கடைகளுக்கு உதவும் வகையில் சிறப்பு உதவித் தொகையை அறிமுகப்படுத்தும் என்று நேற்று ஓர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
பினாங்கில், 3 மாத பயன்பாட்டு மானியக் கட்டணத்தைப் பெற 250க்கும் மேற்பட்ட காப்பி கடைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அதே நேரத்தில் 2,000க்கும் மேற்பட்ட காப்பி கடைகள் கார்ல்ஸ்பெர்க் நிறுவனத்தின் விளம்பரத்தால் பயனடைகின்றன. அங்கு அவர்கள் கார்ல்ஸ்பெர்க் நிறுவனத்தின் விற்பனையிலிருந்து அதிக லாபத்தைப் பெற முடியும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
மலேசியா கார்ல்ஸ்பெர்க் நிறுவனத்தின் விற்பனை மேலாளர் லிம் எங் வா கூறுகையில், “கோவிட் -19 தாக்கத்தினால் பினாங்கு வணிகங்கள் நிதி ரீதியாக பாதிக்கப்பட்டதாக கூறினார். மேலும், நிபந்தனை நடமாட்டக் கட்டுப்பாடு ஆணை காலத்தில் வணிகங்கள் மீண்டும் லாபத்தை ஈட்ட மலேசியா கார்ல்ஸ்பெர்க்கின் இந்த புதிய பிரசாரம் உதவும் என்று அவர் அந்த அறிக்கையில் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

nineteen − sixteen =