பினாங்கு கடலடி சுரங்கப்பாதைத் திட்டம் லிம் குவான் எங்கிடம் 3ஆவது நாளாக விசாரணை

பினாங்கில் மேற்கொள்ளப்பட்டு வரும் 630 கோடி வெள்ளி மதிப்புள்ள கடலடி சுரங்கப்பாதைத் திட்டம் தொடர்பாக பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கத்தில் நிதி அமைச்சராக இருந்த லிம் குவான் எங்கிடம் நேற்று 3ஆவது நாளாக பல மணி நேரம் விசாரணை மேற்கொள்ளப்பட்டதாக தெரிய வந்துள்ளது.
புத்ரா ஜெயாவில் இருக்கும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (எம்ஏசிசி) அலுவலகத்தில் லிம் குவான் எங் முதல் நாள் 6 மணி நேரத்திற்கு தனது வாக்கு மூலத்தை வழங்கியுள்ளார்.
பின்னர் சனிக்கிழமையும் அவர் வாக்குமூலம் வழங்கினார். நேற்று 3ஆவது நாளாக அவரிடம் பல மணி நேரம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
ஜனநாயக செயல் கட்சியின் தலைமைச் செயலாளர் லிம் குவான் எங்குடன் ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.என். நேதாஜி ராயரும் உடன் வந்திருந்தார்.
630 கோடி ரிங்கிட் மதிப்புடைய இத்திட்டத்தின் ஊழல் குறித்த விசாரணைக்கு உதவும் பொருட்டு இம்மாதம் 7ஆம் தேதி பினாங்கு மாநில முதலமைச்சர் சௌ கோன் இயோவ் மற்றும் துணை முதல்வர் பேராசிரியர் டாக்டர் பி.இராமசாமி உட்பட மாநில ஆட்சிக் குழு உறுப்பினர்களிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

13 + 14 =