பினாங்கு இந்து தர்ம மாமன்றம் ஏற்பாட்டில் வர்ணம் தீட்டும் போட்டி

மலேசிய இந்து தர்ம மாமன்றம், பினாங்கு அருள் நிலையத்தின் ஏற்பாட்டில் தேசிய தினத்தை முன்னிட்டு மாணவர்களுக்கிடையி லான வர்ணம் தீட்டும் போட்டி,பினாங்கு பரிவுமிக்க சமுதாய மண்டபத்தில் சிறப்புடன் நடைபெற்றது.
இந்நிகழ்வுக்கு மாநில அருள் நிலைய தலைவர் தனபாலன் நந்தகுமார் தலைமையேற்றார். இந்நிகழ்ச்சியில் சிறப்பு பிரமுகர்களாக ஆயர் ஹீத்தாம் சட்டமன்ற உறுப்பினர் ஜோசப் இங், மாநில மாமன்றத்தின் ஆலோசகர் டாக்டர் குணசேகரன், மாமன்ற ஜூனியர் கிளப்பின் தலைவர் சு.கோமதி மற்றும் திரளான பள்ளி மாணவர்கள் கலந்து சிறப்பித்தனர்.தேசிய தினக் கொண்டாட்டம், நாட்டின் மீது பற்று வைத்தல் ஆகிய பண்பு நலன்களை சிறு வயது மாணவர்களுக்கு விதைப்பதின் மூலமாக எதிர்காலத்தில் அவர்கள் வளர்ந்த பிறகு சிறந்த குடிமக்களாக திகழ்வார்கள் என்பதன் அடிப்படை நோக்கத்துக்காக இந்த நாட்டின் 63 வது தேசிய தின நாளை முன்னிட்டு வர்ணம் தீட்டும் போட்டியை மலேசிய இந்து தர்ம மாமன்ற, பினாங்கு மாநில அருள் நிலையம் ஏற்பாடு செய்ததாக மாநில அருள் நிலையத் தலைவர் ந.தனபாலன் கூறினார்.இரு பிரிவுகளாக நடத்தப்பட்ட வர்ணம் தீட்டும் போட்டியில் 8 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கான போட்டியில் புக்கிட் மெர்தாஜம் தமிழ்ப்பள்ளியை சேர்ந்த தக்ஷினாம்பிகை ரவி முதல் நிலையிலும், இரண்டாம் இடத்தில் மேபீல்ட் தோட்ட தமிழ்ப்பள்ளியை சேர்ந்த நிஷன் ஜெயகுமார் மூன்றாம் இடத்தில் பெர்மாத்தாங் தமிழ்ப்பள்ளியை சேர்ந்த திருஷாம் கார்த்திகேசு ஆகியோர் வென்றனர். இதனிடையே 10 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கு இடையிலான போட்டியில் முதல் இடத்தில் பெர்மாத்தாங் திங்கி தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த அர்ச்சனா கார்த்திகேசு,இரண்டாம் நிலையில் செபெராங் பிறை தேசிய பள்ளியைக் சேர்ந்த எஸ்.லோதீஸ்வரன் மூன்றாம் நிலை வெற்றியாளராக புக்கிட் மெர்தாஜம் தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த லோகாம்பிகை ரவி தேர்வு பெற்றார்.நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் சார்பில் வெற்றியாளர்களுக்கு நற்சான்றிதழும் பரிசுகளும் வழங்கப்பட்டன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

five × three =