பினாங்கில் 24 சாலைத் தடுப்புகள்

0

இம்மாதம் 31 மார்ச் வரைக்கும் நடைபெறவுள்ள நடமாட்ட கட்டுப்பாடு ஆணை அமல் படுத்தப்படும் கால கட்டத்தில் பினாங்கு முழு வதும் 24 சாலை தடுப்புகள் போடப்படும் என்று பினாங்கு காவல் துறை தலைவர் டத்தோ சஹாபுடின் அப்துல் மானான் கூறினார்.
முக்கியமான காரணங்கள் இன்றி பொது மக்கள் வீட்டை விட்டு வெளியேறுவதை தடுப்ப தற்காகவே மேற்கண்ட நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளது என்றார் அவர். பொது மக்களின் நடமாட் டத்தை கண்காணிக்க முக்கிய இடங்களில் இந்த தடுப்புகள் போடப்படுகின் றன.
இதற்கிடையில் வடகிழக்கு மாநில காவல் துறை தலைவர் உதவி கமிஷன் சோஃபியான் சந்தோங்குடனும் காவல்துறை அதிகாரிகளுடனும் பினாங்கு நகராண்மைக் கழக அமலாக்க அதிகாரிகளுடனும் இணைந்து சஹாபுடின் ஆயர் ஈத்தாம் பொது சந்தையில் கண் காணிப்பு நடவடிக்கையை மேற்கொண்டார்.
4 இடங்களில் சாலை யோரங்களில் வியாபாரம் செய்து வருபவர்கள் தங்கள் வியாபாரத்தை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்ற உத்தரவு நேற்று அமலுக்கு வந்ததைத் தொடர்ந்து மேற் கண்ட கண்காணிப்பு நட வடிக்கை மேற்கொள்ளப் பட்டது.
பாயான் பாரு, ஜாலான் பேராக் மற்றும் ஜெலுத்தோங் பொது சந்தைகள் மற்ற மூன்று இடங்கள் ஆகும்.
நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணை தொடர்பான ஆலோ சனைகளை அமலாக்க அதிகாரிகள் வழங்கிய போதி லும் அங்கிருந்த அங்காடி கடைக்காரர்கள் பிடிவாதமாக வியாபாரம் செய்து வந்ததால் மேற்கண்ட நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டது.
நடமாட்ட கட்டுப்பாடு ஆணை அமல்படுத்தப்பட்ட காலகட்டத்தில் மாநிலத்தில் குற்றச்செயல்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது பதிவாகி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

two × two =