பினாங்கில் தீயை அணைக்க 8 மணி நேரப் போராட்டம்

0

நேற்று காலையில் புக்கிட் பெண்டேராவின் கெக் லோக் சி சீனக் கோயிலுக்கு அருகில் ஏற்பட்ட காட்டுத் தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் 7 மணி நேரத்துக்கும் மேலாகப் போராடியுள்ளனர்.
நேற்று செய்தி நேரம் வரை எஞ்சிய தீயைக் கட்டுப்படுத்த ஒரு சில வீரர்கள் மட்டுமே அங்கு பணியில் இருந்ததாக மாநில சுற்றுச் சூழல் அதிகாரி பீ பூன் பூ கூறினார். அத்தீக்குக் காரணமானவரை அடையாளம் காண தற்போது தடயவியல் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இத்தீ இரவில் ஏற்பட்டதால், அது முற்றிலும் அணைந்து விட்டதா என்பதைக் கண்டுபிடிக்க வீரர்கள் சிரமப்பட்டனர். ஆயினும் 7 ஹெக்டர் காட்டை அழித்த அத்தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதை வீரர்கள் பின்னர் உணர்ந்தனர்.
சம்பவ இடத்துக்குப் பாதை இல்லாததும், அப்பகுதி மிகவும் சரிவாக இருந்ததாலும் தீயைக் கட்டுப்படுத்துவதில் வீரர்கள் சிரமப்பட்டதாக பாயா தெருபோங் தீயணைப்பு நிலையத் தலைவர் முகமது சாலே கூறினார். காற்றின் சீற்றத்தாலும் தீ மிக விரைவாகப் பரவியது. தற்போது தீ கட்டுப்படுத்தப் பட்டாலும், வீரர்கள் அங்குக் கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்கின்றனர்.
நேற்று மாலை 4.10 மணியளவில் தீ முற்றாக அணைக்கப்பட்டுள்ளதாக சாலே கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

three × 3 =