பிக் சுவிப் ஜேக்போட் பரிசுத் தொகை 25 லட்சமாக உயர்வு கண்டுள்ளது

பான் மலேசியாவின் பிக் சுவிப் ஜேக்போட் பரிசுத் தொகை தற்போது 25 லட்சமாக உயர்ந்துள்ளது.
நேற்று காலை சுங்கை பீசி குதிரை பந்தயக் கிளப்பில் இம்மாதத்திற்கான பிக் சுவிப் அதிர்ஷ்ட குலுக்கு எண்கள் குலுக்கப்பட்டன. பத்திரிகையாளர் முன்னிலையில் இந்த குலுக்கல் நடந்தது.
இந்த குலுக்கலில் எந்த அதிர்ஷ்டசாலியும் ஜேக்போட் பரிசுத் தொகையை வெல்லவில்லை. இதனால், ஜேக்போட் பரிசுத் தொகை 25 லட்சமாக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த குலுக்கல் வரும் நவம்பர் 1ஆம் தேதி குலுக்கப்படுகிறது. அந்த குலுக்கலில் ஜேக்போட் பரிசுத் தொகையை வெல்லப்போகும் அதிஷ்டசாலி யார் என்பது தெரிய வரலாம்.
இதனிடையே, நேற்று நடைபெற்ற குலுக்கலில் பிக் சுவிப்பின் முதல் பரிசான வெ. 30 லட்சத்தை சிலாங்கூர் மாநிலத்தைச் சேர்ந்த அதிர்ஷ்டசாலி தட்டிச் சென்றார். 2ஆவது பரிசான 20 லட்சம் வெள்ளியை ஜொகூர் அதிர்ஷ்டசாலியும் ஒரு லட்சம் வெள்ளியான 3ஆவது பரிசுத் தொகையை கோலாலம்பூர் அதிர்ஷ்டசாலியும் தட்டிச் சென்றனர்.
வரும் நவம்பர் 1ஆம் தேதி பிக் சுவிப் குலுக்கல் நடைபெறும் வேளையில், 25 லட்சம் வெள்ளி ஜேக்போட் பரிசுத் தொகை காத்துக் கொண்டிருப்பதால் வாடிக்கையாளர்கள் இப்போதே அதிர்ஷ்டகுலுக்கு டிக்கெட்டுகளை வாங்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

one × five =