
2 பிகேஆர் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஸ்டீவன் சுங் (தெப்ராவ்) மற்றும் லேரி ஸெங் (ஜுலாவ்) கட்சி தாவி பிரதமர் டான்ஸ்ரீ முஹிடின் யாசினுக்கு தங்களின் ஆதரவை வெளிப்படுத்தினர். நேற்று 2 எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கத்தின் ஆதரவாக சத்திய பிரமாணங்களை தாம் பெற்றுக் கொண்டதாக பிரதமர் டான்ஸ்ரீ முஹிடின் யாசின் கூறினார். ஜுலாவ் நாடாளுமன்ற உறுப்பினர் லேரி ஸெங் மற்றும் தெப்ராவ் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்டீவன் சுங் இருவரும் தங்களின் சத்திய பிரமாணங்களை தம்மிடம் ஒப்படைத்ததாக தமது முகநூலில் அவர் தெரிவித்தார். இவர்களின் ஆதரவு பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கத்தை வலிமைப்படுத்தும் என தாம் நம்புவதாக அவர் குறிப்பிட்டார். இந்த நிகழ்வு இங்குள்ள புத்ராஜெயா அனைத்துலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பெரிக்காத்தான் நேஷனல் அமைச்சர்களான அஸ்மின் அலி, ஸுராய்டா கமாருடின், ஹம்ஸா சைனுடின், சைபுடின் அப்துல்லா மற்றும் தக்கியுடின் ஹசான் ஆகியோரும் கலந்து கொண்டனர்.