பிகேஆரில் இருந்து 5 தலைவர்கள் நீக்கம்

பிகேஆர் முன்னாள் துணைத் தலைவர் அஸ்மின் அலியுடன் தொடர்புள்ள 5 தலைவர்கள் கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டனர்.
பிகேஆர் மகளிர் அணித் தலைவி ஹனிஸா தால்ஹா, பினாங்கு மகளிர் அணித் தலைவி நூர் ஸரினா ஸக்காரியா, கட்சியின் சபா மகளிர் அணித் தலைவி ரஹிமா மஜிட், பினாங்கு சட்டமன்ற உறுப்பினர்களான டாக்டர் அபிப் பஹார்டின், ஸுல்கிப்ளி இப்ராஹிம் ஆகியோர் கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டதாக பிகேஆர் ஒழுங்கு நடவடிக்கை வாரியத் தலைவர் அமாட் காசிம் கூறினார்.
ஒழுங்கு நடவடிக்கை வாரியத்தின் பரிந்துரைகளைப் பரிசீலித்த பின் பிகேஆர் மத்திய தலைமைத்துவம் இந்த முடிவைச் செய்ததாக அவர் குறிப்பிட்டார்.
கடந்த பிப்ரவரியில் ‘ஷெரட்டன் நகர்வு’க்கு காரணமாக இருந்த அஸ்மின் அலியினால் பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம் கவிழ்ந்ததைத் தொடர்ந்து இவர்களுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டினார். கடந்த பிப்ரவரி 23 இரவு ஷெரட்டன் ஹோட்டலில் அம்னோ மற்றும் பாஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் அஸ்மின் அணியினர் சந்திப்பு நடத்தியதைத் தொடர்ந்து பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம் கவிழ்ந்தது.
கட்சியின் உதவித் தலைவர் தியான் சுவா, மாச்சாப் ஜெயா சட்டமன்ற உறுப்பினர் கினி லிம், பிகேஆர் பினாங்கு மகளிர் அணி தொடர்புக் குழுத் தலைவர் கரோலின் கோர் ஆகியோருக்கு எதிராக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அமாட் காசிம் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

9 + five =