பிகேஆரிலிருந்து விலக எனக்கு நெருக்குதல் தரப்பட்டது

பிகே ஆரிலிருந்து விலகி கட்சி மாறும்படி தமக்கு நெருக்குதல் கொடுக்கப்பட்டதாக பத்து தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பி,பிரபாகரன் மலேசியா கினிக்கு அளித்த பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். தம்மை கெராக்கானில் சேரும்படி பிகேஆரின் தலைவர்களில் ஒருவரான டாக்டர் அஃபிஃப் பஹாருடின் கேட்டுக் கொண்டதாகவும் அதற்குத் தாம் சம்மதிக்கவில்லை என்று கூறிவிட்டதாகவும் அவர் தெரிவித்தார். அன்வார் இப்ராஹிமின் அரசியல் செயலாளர் ஃபார்ஹாஸ் வா ஃபா சல்வடோர் ரிஸால் முபாராக், அது பற்றிக் குறிப்பிட்டது உண்மையே என்றும் தாம் அஃபிஃப் பஹாருடினை சந்தித்ததாகவும் ஆனால், கட்சி மாற தாம் இணக்கம் தெரிவிக்கவில்லை என்றும் பிரபாகரன் தெரிவித்தார்.
தாம் தற்போது அரசியல் பேச விரும்பவில்லை என்றும், தமது கொள்கையிலிருந்து விலகப் போவதில்லை என்றும் தெரிவித்ததுடன் தாம் தொடர்ந்து பிகேஆரில் இருந்து மக்கள் சேவையைத் தொடரப் போவதாகவும் பிரபாகரன் தெரிவித்தார்

1 COMMENT

  1. மாண்புமிகு பிரபாகரன் அவர்களே உங்கள் கொள்கையில் இருந்து விலகாதீர்கள் தொடர்ந்து மக்களுக்கு நீங்கள் செய்ய வேண்டிய பணி இன்னும் நிறையவே இருக்கின்றது உங்களுக்கு வாக்களித்து வெற்றி பெறச்செய்த பத்து தொகுதி மக்கள் உங்கள் சேவையை எதிர்பார்கின்றார்கள். கெரக்கான் கட்சியில் தற்போது மக்களுக்கு சேவை செய்ய நல்ல தலைவர்கள் இல்லை அதனால் உங்களை தேடுகிறார்கள்.நல்ல தமிழ்ச் சமுதாயத் தலைவர்களும் அதில் இல்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

3 × 5 =