பிகேஆரிலிருந்து கட்சி மாறியவர்கள் மீது 1 கோடி ரிங்கிட் இழப்பீட்டு வழக்கு

பிகேஆரிலிருந்து கட்சி மாறிய 12 மக்கள் பிரதிநிதிகள் மீது தலா ஒரு கோடி ரிங்கிட இழப்பீட்டு வழக்கு தாக்கல் செய்யப்படும் என அதன் பொருளாளர் லீ சியன் சுங் தெரிவித்தார்.
2018ஆம் ஆண்டின் பொதுத்தேர்
தலின்போது, வேட்பாளர்களாகத் தேர்வு பெற்றவர்கள் அத் தொகையைச் செலுத்துவோம் என அதற்கான ஆவணத்தில் கையெ ஞுழுத்திட்டிருப் பதாக லீ தெரிவித்தார்.
அடுத்த வாரம் இழப்பீட்டைச் செலுத்த வேண்டுமென்ற கடிதங்கள் சம்பந்தப்பட்டோருக்கு அனுப்பப்படும் என்றும் அந்தப் பணத்தை அவர்கள் எவ்வாறு செலுத்தப் போகின்றனர் என்பதைக் கடித வாயிலாகத் தெரிவிக்க வேண்டுமென்றும் அப்பணத்தைச் செலுத்தத் தவறினால், சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் லீ தெரிவித்தார்.
தேர்ந்தெடுக்கப்பட்ட பிகேஆர்
மக்கள் பிரதிநிதிகள் பதவியிலி ருந்து நீக்கப்பட்டாலோ, கட்சி மாறினாலோ, கட்சியிலிருந்து விலகி சுயேச்சையாகச் செயல்பட் டாலோ ஒரு கோடி ரிங்கிட்டைச் செலுத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்தப் பணமானது கட்சியிலி ருந்து விலகினாலோ அல்லது கட்சியிலிருந்து விலக்கப்பட்டாலோ, 7 நாள்களுக்குள் செலுத்த வேண்டும்.
கட்சி மாறிய 12 மக்கள் பிரதிநிதிகளில் 9 நாடாளுமன்ற உறுப்பினர்களும் 3 சட்டமன்ற உறுப்பினர்களும் அடங்குவர்.
சட்டமன்ற உறுப்பினர்களில் சிலாங்கூர், கோம்பாக் செத்தியாவின் முகமட் ஹில்மான் இடாம், மலாக்கா ரெம்பியாவின் முகமட் ஜைலானி காமிஸ் மற்றும் ஜொகூரின் சோங் ஃபாத் ஃபுல் ஆகியோர் அடங்குவர்.
மேலும், கட்சி மாறிய நாடாளுமன்ற உறுப்பினர்களான கோம்பாக்கின் அஸ்மின் அலி, அம்பாங்கின் ஸுரைடா கமாருடின், இந்திரா மக்கோத்தாவின் சைஃபுடின் அப்துல்லா, பண்டார் துன் ரசாக்கின் கமாருடின் ஜாஃபார், நிபோங் திபாலைச் சேர்ந்த மன்சோர் ஓஸ்மான், பத்து பஹாட்டின் ரஷிட் ஹஸ்னோன், சிகாமட்டின் சந்தாரா குமார், சரவாக், சராத்தோக்கின் அலி பிஜு மற்றும் புஞ்சாக் போர்னியோவைச் சேர்ந்த வில்லி மோங்கின் ஆகியோர் பட்டியலில் அடங்குவர்.
கோம்பாக் நாடாளுமன்ற உறுப் பினராகவும் புக்கிட் அந்தாராபங்சா சட்டமன்ற உறுப்பினராகவும் இருக்கும் அஸ்மின் அலி, மொத்தம் 2 கோடி ரிங்கிட்டைச் செலுத்த வேண்டுமென லீ குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

6 + ten =