பிகேஆரின் உட்கட்சிப் பிரச்சினை நாட்டின் வளர்ச்சியைப் பாதிக்கிறது

0

பிகேஆரின் பேராளர் மாநாட் டில் எழுந்த மோதல் கட்சியில் கடுமையான பிரச்சினை உருவாகியிருப் பதை புலப்படுத்துவதாக அம்னோவின் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ முகமட் ஹசான் கவலை தெரிவித்தார்.
பொருளாதார விவகாரங் களுக்கான அமைச்சர் டத்தோஸ்ரீ அஸ்மின் அலி ரிங்கிட்டின் மதிப்புச் சரிவு மற்றும் நாட்டின் கடன் சுமை அதிகரித்துள்ளதைத் தடுக்கு எந்த நடவடிக்கையையும் எடுக்க முடியாத நிலையில் இருக்கிறார்.
இதன் காரணமாகவே, இவ்வாண்டு குறைந்தது 1,000 கோடி ரிங்கிட் அந்நிய முதலீடு நாட்டை விட்டு வெளியேறியுள்ளது.
பிகேஆரின் உள்கட்சி மோதல்கள், ஆட்சியைத் தவறானவர்களின் கைகளில் ஒப்படைத்து விட்டோமோ என்ற கேள்வியை எழுவதாக முகமட் ஹசான் சுட்டிக்காட்டினார்.
அன்வாரும் அஸ்மினும் பிரதமர் பதவிக்காக மோதிக் கொண்டிருப்பது எவ்வளவு காலம் நீடிக்கும் என தெரியவில்லை. இதில் அமைச்சர்கள் சிலரும் ஈடுபட்டுள்ளது கவலையை அளிக்கிறது. இது மலேசியா பாரு என்பதை விட மலேசியா ஹுரு ஹாரா(மலேசியா குளறுபடி) என்றே சொல்ல வேண்டும்.
பிகேஆரின் மேல்மட்ட தலைவர் கள் இருவரின் மோதலை அடுத்து, மலாக்காவில் நடந்த கட்சியின் இளைஞர் மாநாட்டில் கைகலப்பு நிகழ்ந்தது கட்சிக்குக் களங்கத்தை உருவாக்கியிருக்கிறது.
மாநாட்டில் வெளிநடப்பு செய்து, சனிக்கிழமை அஸ்மின், அவருக்கு நெருக்கமான அமைச்சர் ஸுரைடா கமாருடின் மற்றும் சிலரும் தலைநகரில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் விருந்து நிகழ்ச்சியை நடத்தி தங்களின் நிலைப்பாட்டை விளக்கி இருந்தனர். அதில் இரண் டாயிரத்தும் அதிகமான கட்சியின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
முகமட் ஹசான் மேலும் கூறுகையில், பக்காத்தான் ஆட்சி
யைக் கைப்பற்றிய பின்னர், நாட்டின் பொருளாதாரம் சீர்குலைந்துள்ள தாகவும் நாடு ஒரு குறிக்கோள் இல்லாமல் எங்கே செல்கிறது என்ற நிலை தோன்றியிருப்பதாகக் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

two × 5 =