பிஎஸ்ஜியை வீழ்த்தியது மென்செஸ்டர் சிட்டி


ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கிண்ணப் போட்டியில் நேற்று நடந்த 2ஆவது முதல் அரையிறுதி ஆட்டத்தில் பி.எஸ்.ஜி. கிளப் 1-2 என்ற கோல் கணக்கில் மென்செஸ்டர் சிட்டியிடம் அதிர்ச்சி தோல்வி கண்டது. நேற்று முன்தினம் முதல் அரையிறுதியிவ் ஸ்பெயின் ரியல் மெட்ரிட் 1-1 என்ற கோல்கணக்கில் இங்கிலாந்தின் செல்சியிடம் டிரா கண்டது. இந்நிலையில் நேற்று நடந்த 2ஆவது அரையிறுதியில் பிரான்சின் பிஎஸ்ஜி கிளப்பை எதிர்த்து இங்கிலாந்தின் மென்செஸ்டர் சிட்டி மோதியது.
இந்த ஆட்டத்தில் 15ஆவது நிமிடத்தில் பிஎஸ்ஜி கிளப்பின் கோலை மார்க்கின் ஹோல் அடித்தார். பிற்பகுதியில் 64ஆவது நிமிடத்தில் சிட்டியின் முதல் கோலை டி புருணி அடித்த வேளையில் 71ஆவது நிமிடத்தில் 2ஆவது கோலை மஹேரேஸ் அடித்து கலக்கினார்.
இறுதியில் மென்செஸ்டர் சிட்டி 2-1 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்றது. வரும் மே 5ஆம் தேதி மென்செஸ்டர் சிட்டி தன் அரங்கில் மீண் டும் பி.எஸ்.ஜி.யைச் சந்திக்கிறது.
அதேசமயம், மே 6ஆம் தேதி செல்சி தன் அரங்கில் ரியல் மெட்ரிட்டைச் சந்திக்கிறது. இவ்விரு அரையிறுதி ஆட்டங்களிலும் அதிக கோல்கணக் கில் வெற்றிபெறும் குழுக்கள் மே 15ஆம் தேதி நடக்கும் இறுதி ஆட்டத் திற்குத் தேர்வுபெறும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

nine + one =