பிஎன்பியின் அடுத்த தலைவராக முன்னாள் தலைமை நீதிபதி அரிபின் நியமனம்


பெர்மோடலான் நேஷனல் பெர்ஹாட்டின் (பிஎன்பி) அடுத்த தலைவராக முன்னாள் தலைமை நீதிபதி அரிபின் ஸக்காரியா நியமனம் பெறவுள்ளார் என ‘தி எட்ஜ்’ சஞ்சிகை கூறியது.
பதவி ஓய்வுபெற்றுச் செல்லும் பிஎன்பி தலைவர் ஸெட்டி அக்தார் அஸிஸுக்கு பதிலாக அரிபின் நியமனம் செய்யப்படவுள்ளார்.
ஸெட்டி அக்தார் அஸிஸின் 3 ஆண்டு தவணைக் காலம் விரைவில் முடிவடையவுள்ளது.
கடந்த 2011 முதல் 2017 வரை அரிபின் தலைமை நீதிபதியாகப் பதவி வகித்துள்ளார்.
அவசரகாலத்தின் போது மாட்சிமை தங்கிய மாமன்னருக்கு ஆலோசனை வழங்கும் சுயேச்சை சிறப்புக் குழுவின் தலைவராகவும் அரிபின் பதவி வகித்து வருகிறார்.
அதே வேளையில் ஒரு கட்டுமான நிறுவனத்தின் தலைவராகவும் அவர் பதவி வகித்து வருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

three × four =