பாஸ் முஹிடினுக்கும் பெரிக்காத்தானுக்கும் விசுவாசமாக இருக்கும் – தக்கியுடின்

0

பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பாஸ் கட்சி, பிரதமர் முஹிடின் யாசினுக்கும் கூட்டணிக்கும் விசுவாசமாக இருக்கும் என்று அதன் தலைமைச் செயலாளர் தக்கியுடின் ஹசான் தெரிவித்தார்.
இதனிடையே ஆட்சி கவிழும், ஆட்சி மாற்றம் வருமென்று எதிர்க்கட்சிகள் பரப்பி வரும் பொய்ச் செய்திகளை பாஸ் பொருட்படுத்தாது என்று அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
பாஸ் கட்சி முஹிடின் யாசின் தலைமையிலான ஆட்சிக்கு என்றென்றும் ஆதரவாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
பாஸ், அம்னோவுடன் கூட்டுச் சேர்ந்து முவாஃபாக்காட் நேஷனலில் இணைந்து செயலாற்றுவதோடு, தேசிய முன்னணி, பெர்சத்து, சபா, சரவாக் ஆகிவற்றின் கட்சிகளோடு இணைந்து பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியை உருவாக்கியுள்ளது.
இக்கூட்டணி ஒற்றுமையாக, வலுவோடு 15ஆவது பொதுத்தேர்தலை சந்திக்கும் என்றும், தொகுதிப் பங்கீடு எந்தவொரு சிக்கலும் இல்லாமல் தீர்க்கப்படுமென்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

eleven − six =