பாஸ் துணையுடன் புத்ராஜெயாவை கைப்பற்றுவோம்

0

இந்நாட்டில் தற்போது பக்காத்தான் ஆட்சியில் மக்கள் மகிழ்ச்சியாக இல்லை என்பது தான் உண்மையான நிலை. எனவே, அடுத்த ஆட்சி பக்காத்தான் அரசாங்கத்திடமே இருக்கும் என்ற ஆசையில் யாரும் திளைக்க வேண்டாம். ஏனென்றால், அடுத்த ஆட்சி தேசிய முன்னணியுடையது என்று டத்தோஸ்ரீ ஸாஹிட் ஹமிடி சூளுரைத்தார்.
மஇகாவின் 73ஆவது பேராளர் மாநாட்டினை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்து உரையாற்றியபோது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
கடந்த காலத்தில் செய்த சில தவறுகளுக்காகத்தான் இன்று தேமு ஆட்சி பீடத்திலிருந்து இறக்கப்பட்டிருக்கிறது. இது ஒரு தொடர்நிலையாக இருக்காது. 61 ஆண்டுகால ஆட்சிக்குப் பிறகுதான் தேமுவை மக்கள் புறந்தள்ளினர். மஇகாவின் 73ஆவது பேராளர் மாநாட்டினை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்து உரையாற்றியபோது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
கடந்த காலத்தில் செய்த சில தவறுகளுக்காகத்தான் இன்று தேமு ஆட்சி பீடத்திலிருந்து இறக்கப்பட்டிருக்கிறது. இது ஒரு தொடர்நிலையாக இருக்காது. 61 ஆண்டுகால ஆட்சிக்குப் பிறகுதான் தேமுவை மக்கள் புறந்தள்ளினர்.
ஆனால், பக்காத்தான் ஹராப்பான் ஆட்சிக்கு வந்து ஒரே வருடத்தில் மக்கள் முகம் சுளிக்கத் தொடங்கிவிட்டனர். அதோடு மட்டுமின்றி, தேமுவோடு பாஸ் கட்சியின் கூட்டணி அடுத்த வெற்றிக்கு வலுவான ஒரு கூட்டணியாக இருக்கும் என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்த தேமு – பாஸ் கூட்டணி மீண்டும் ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும். எது எப்படி இருந்தாலும் அடுத்தத் தேர்தலுக்குள் மக்களின் ஆதரவை பெறுவதில் மஇகா உட்பட அனைத்து தேமு கட்சிகளும் களமிறங்கி வேலை செய்வது அவசியம் என்றார் அவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here