பாஸ் தலைவருக்கு இந்து சங்கம் துணை போவதா?

கெடாவில் இந்து கோயில்களை தகர்க்கும் பாஸ் கட்சித் தலைவருக்கு இந்து சங்கம் துணைபோவது ஏன் என்று சுங்கை சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ஆ. சிவநேசன் கேள்வி எழுப்பினார்.
மலேசிய இந்து சங்கத் தலைவர் டத்தோ மோகன் ஷான் பாஸ் கட்சித் தலைவரான ஹாடி அவாங்கை சந்தித்துள்ளார்.
இந்த கலந்துரையாடலுக்கு இந்து சங்கமே ஏற்பாடு செய்ததா என்று அவர் கேள்வி எழுப்பினார்.
கெடா மாநிலத்தில் ரயில்வே ஸ்டேசன் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த முனீஸ்வரன் கோயிலை பொய்யானக் காரணத்தைக்கூறி 70 ஆண்டுகள் பழமை வாய்ந்த அத்திருத்தலத்தை அகற்றியது பாஸ் அரசாங்கம் என்பதை மோகன் ஷான் மறந்து விட்டாரா என்று கேள்வி எழுப்பினார்.
பொய்யான காரணத்தை முன்வைத்து கோயிலை உடைத்துள்ளார்கள். அவர்களிடம் நீங்கள் பேசியது என்ன என்று அவர் கேள்வி எழுப்பினார்.
கெடா மாநில பக்காத்தான் ஹராப்பான் ஆட்சியில், கோயில் உடைப்பு சம்பவம் நடைபெறவில்லை. கோயில்களுக்கு எந்த பிரச்சினையும் வரவில்லை.
ஆனால், பாஸ் ஆட்சிக்கு வந்து இரண்டே மாதங்களில் ரயில்வே ஸ்டேசன் முனீஸ்வரன் கோயில் அகற்றப்பட்டது.
இதற்கு மோகன் ஷான் மக்களிடம் என்ன சொல்லப் போகின்றார்.
மதமாற்றப் பிரச்சினையில் இந்திரா காந்தி மகளை தாயிடம் ஒப்படைக்க வேண்டும் என நீதி மன்றத்தின் ஆணை கிடைத்தும், இன்று வரையில், தன் மகள் கிடைப்பாள் என்று ஏங்கித் தவிக்கும் அந்த தாயின் எதிர்பார்ப்புக்கு பாஸ் தலைவர் என்ன நடவடிக்கை எடுக்கப் போகின்றார் என்றார் அவர்.மோகன் ஷான் மீது எனக்கு தனிப்பட்ட முறையில் பிரச்சினை கிடையாது.
ஆனால், இந்து சமய தலைமைத்துவத்தில் இருந்துகொண்டு இந்து மதம் பாதிக்கப்படும்போது, சமய ரீதியாக அவரை எதிரியாகத்தான் பார்க்கிறேன் என்று சிவநேசன் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

one × two =