பாஸ் கட்சி அமானாவை கீழ்ப்படியாத குழந்தை என்று கூறுவதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை!

பாஸ் கட்சியின் தேசியத் தலைவர் அப்துல் ஹாடி அவாங் அமானாக் கட்சியை கீழ்ப்படி யாத குழந்தை என்று கருத் துரைத்ததில் ஆச்சரியப்படுவ தற்கு ஒன்று மில்லை என்று அமானாவின் துணைத் தலைவர் மாபோஸ் ஒமார் நேற்று முன்தினம் மலேசியா கினியிடம் கூறினார்.
மற்றவர்களுக்கு அந்த மாதிரி யான முத்திரையை (லேபள்) குத்துவது பாஸ் கட்சியின் தலைமைத்துவத்திற்கு வழக்க மான ஒன்றுதான் என்று அவர் கூறினார்.
பாஸ் கட்சி தலைமைத்துவத் துடன் ஒத்துப்போக முடியாத காரணத்தால் முன்னாள் பாஸ் தலைவர்களால் 2015இல் அமானா கட்சி உருவாக்கப் பட்டது என்பது குறிப்பிடத்தக் கது.
அமானாவை ஹாடி கீழ்ப் படியாத குழந்தை என்று கூறுவது தவறாகும். காரணம் நாங்கள் (அமானா) பிரிந்து போனதற்கு பாஸ் கட்சிதான் காரணமாகும் என்று மாபோஸ் சுட்டிக்காட்டினார்.
நாங்கள் (அமானா கட்சி) அவர்களின் குழந்தைகள்தான். ஆனால் கீழ்ப்படியாத குழந்தை கள் அல்ல. நாங்கள் அந்த மாதிரி வேலை செய்வதிலிருந்து தப்பிக்கவே நாங்கள் (அமானா கட்சி) ஓடி வந்து விட்டோம் என்று அவர் மேலும் கூறினார்.
ஜசெகவுடன் அமானா தொடர்ந்து ஒத்துழைப்பதற்காக அமானாவை கீழ்ப்படியாத குழந்தை என்று ஹாடி அறிக்கை விடுத்திருந்ததின் தொடர்பாக பொக்கோக் சேனாவின் எம்.பியான மாபோஸ் கருத்துரைக்கும் போது இவ்வாறு கூறினார்.
அமானா பாஸ் கட்சியின் குழந்தை என்று பூட்டான் வாரி சான் தொகுதித் தலைவர் இஸ்ஸாட்டுள் அய்யினி நிஸ்சான்சோ கூறியதாகக் கூறப் படும் காணொளி ஒன்று இணையத் தளங்களில் வைரலாகி இருக்கிறது. அக்காணொளியில் சபா மாநிலத் தேர்தலில் தஞ்சோங் கிராமாட் தொகுதியில் போட்டியிடும் அமானா உறுப்பினர் ரோஸ்லை வாஸ்லிக்கு வாக்கு போடுமாறு பாஸ் கட்சி உறுப்பினர்களை இஸ்ஸாட்டுள் கேட்டுக் கொண்டதாகக் கூறப்படுகிறது.
அக்காணெளியைப் பற்றி கருத்துரைக்கும் போது பாஸ் கட்சியின் தேசியத் தலைவர் அப்துல் ஹாடி அவாங் இவ்வாறு கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

5 × 2 =