பாஸ் கட்சியின் நம்பிக்கைத் தீர்மானம்: அன்வாருக்கு எதிரான கீழறுப்பு நடவடிக்கையே!

அன்வார் இப்ராஹிம் பிரதமர் பதவியை அடைய விடாமல் தடுக்கவே துன் மகாதீருக்கு ஆதரவான நம்பிக்கைத் தீர்மான
த்தை பாஸ் கட்சி முன்னெடுப்ப தாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அன்வாரின் அரசியல் செயலாளரான ஃபார்ஹாஸ் சல்வடோர் ரிஸால் முபாராக் கூறும்போது, அது திட்டமிட்ட அரசியல் கீழறுப்பு நடவடிக்கை என்றும் தற்போதைக்கு மகாதீர் வலுவான வராக இருந்தாலும், அன்வார் இன்னும் 6 மாதங்களுக்குக் காத்திருந்து, இறுதியில் அந்தப் பதவியில் அமர்வார் என்றும் திட்டவட்டமாகக் குறிப்பிட்டார்.
பாஸ் கட்சியின் நம்பிக்கைத் தீர்மானத்தில் தமக்கு சம்பந்தம் இல்லை என்று மகாதீர் கூறினாலும், அத்திட்டத்தின் சூத்ரதாரியே அவர்தான் என ஃபார்ஹாஸ் குற்றம் சாட்டினார்.
இதனிடையே, அது பற்றிக் குறிப்பிட்ட அம்னோவின் தலைமைச் செயலாளர் அனுவார் மூசா, பாஸ் கட்சியின் நம்பிக்கைத் தீர்மானமானது நாட்டின் ஒட்டு மொத்த நலனுக்காக பக்காத்தான் கூட்டணியின் நடவடிக்கைக்கு வலு சேர்ப்பதற்காகத்தான் என்றும் தனிப்பட்ட ஒருவர் தமது லட்சியத்தை அடைய வைப்பதற்காக இல்லை என்றும் தெரிவித்தார்.
அது, நாட்டை வளப்படுத்த பிரதமருக்கு ஆதரவு தெரிவிப்பதற்
காகவுமே என்று அவர் சுட்டிக் காட்டினார்.
தமது விளக்கத்தில் அவர் யாரை யும் குறிப்பிடாமல் இருந்தாலும், அது அன்வாரைத்தான் குறிப்பிடு வதாகக் கருதப்படுகிறது.
அது பற்றிக் குறிப்பிட்ட அம்னோவின் துணைத் தலைவர் முகமட் ஹசான், பாஸ் கட்சி டாக்டர் மகாதீருக்கு ஆதர
வாகக் கொண்டுவரும் தீர்மான த்தை அம்னோ ஆதரிக்க வேண்டு
மென்ற முடிவு இன்னும் எடுக்கப்பட வில்லை என்று குறிப்பிட்டிருந்தார்.
கடந்த சனிக்கிழமையன்று, பாஸ் கட்சியின் துணைத் தலைவர் துவான் இப்ராஹிம் துவான் மான், தமது கட்சி மகாதீருக்கு ஆதரவு தெரிவிக்கும் நம்பிக்கை தீர்மானத்தை அடுத்த மாதம் தொடங்கும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் தாக்கல் செய்யும் என்றும் மகாதீர் இத்தவணை முடியும் வரை பிரதமர் பதவியில் நீடிக்க வேண்டுமென்ற ஆதரவையும் தெரிவிக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.
மகாதீரின் மீது சிலர் நம்பிக்கையில்லா தீர்மானத்தைத் தாக்கல் செய்வதிலிருந்து தடுக்
கவே, நம்பிக்கைத் தீர்மானத்தை பாஸ் கட்சி தாக்கல் செய்ய முனைந்து வருவதாகச் சொல்லப்
படுகிறது. கடந்த வாரம் ராய்ட்ட ருக்கு வழங்கிய பேட்டியில் அன்
வார், தாம் பிரதமர் பதவிக்காக 20 ஆண்டு காலம் காத்திருப்ப தாகவும், இன்னும் 6 மாத காலம் தாம் காத்திருக்கவும் தயாராக இருப்பதாகக் குறிப்பிட்டிருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

10 − one =