பாஸ் கட்சியின் உறவு தேவையில்லை

பக்காத்தான் ஹராப்பானின் உறுப்புக் கட்சியாக பாஸ் இணைவதற்கான அவசியம் இல்லையென பிகேஆரின் தலைமைச் செயலாளர் சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் குறிப்பிட்டுள்ளார்.
பக்காத்தான் வலுவாக உள்ளது. எனவே, பாஸ் கட்சியின் உதவி தேவையில்லை என அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
பிரிபூமி பெர்சத்து பாஸ் கட்சியோடு இணைந்து ஆட்சியில் பங்கு வகிக்க வியூகம் வகுக்கப்பட்டுள்ளதாக எஃப்எம்டி நேற்று செய்தி வெளியிட்டது பற்றி அவரிடம் கேட்கப்பட்டபோது, அவர் இதனைத் தெரிவித்தார்.
பாஸ் கட்சியின் தலைவர் ஹாடி அவாங் தம்மைச் சந்தித்ததில் முக்கியத்துவம் எதுவும் இல்லையென மகாதீர் குறிப்பிட்டிருந்தார்.
பக்காத்தான் கூட்டணியில் எந்தப் புதிய கட்சியையும் இணைப்பதற்கு முன்னர், உறுப்புக் கட்சிகளின் ஒருமித்த கருத்துடன்தான் அது நடக்க வேண்டும் ஆனால், அதற்கு தற்போது அவசியம் எழவில்லை என்று சைஃபுடின் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

14 + six =