பாஸ் எந்தக் கூட்டணியில் உள்ளது என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும்

0

பாஸ் எந்தக் கூட்டணியில் உள்ளது? பெரிக்காத்தான் நேஷனலிலா, முவாஃபக்காட் நேஷனலிலா என்ற தனது நிலைப்பாட்டை அந்த இஸ்லாமியக் கட்சி வெளிப்படுத்த வேண்டும் என அமானா துணைத் தலைவர் சலாஹுடின் அயூப் வலியுறுத்தினார்.
இல்லாவிட்டால், ஒரே சமயத்தில் இவ்விரு கூட்டணியிலும் அந்த இஸ்லாமியக் கட்சி உள்ளதா என்பதை பாஸ் தெளிவுபடுத்த வேண்டும் என்றார் அவர்.
அமைச்சரவையில் இருப்பதால், பெரிக்காத்தான் நேஷனலை ஆதரிப்பதாக பாஸ் தலைவர்கள் விளக்கம் தருகின்றனர். ஆனால் அதே சமயத்தில் முவாஃபக்காட் நேஷனலை வலிமைப்படுத்த வேண்டும் எனவும் பாஸ் தலைவர்கள் வலியுறுத்தி வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
ஆகையால் இந்த விவகாரத்தில் பாஸ் கட்சியின் நிலைப்பாடு தெளிவாக இல்லை என விவசாயம்
மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்துறை முன்னாள் அமைச்சருமான அவர் சொன்னார்.
பாஸ் தலைவர்களுக்கு தற்போது அதிகார ஆசை வந்துவிட்டதாக பூலாய் நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

17 + six =