பாஸ் அரசியல் சூழ்நிலைக்கேற்ப நிலைப்பாட்டை மாற்றி வருகிறது

நடப்பு அரசியல் சூழ்நிலைக்கு ஏற்ப பாஸ் கட்சி தனது நிலைப்பாட்டை மாற்றி வருவதாக மூத்த பத்திரிகையாளர் டத்தோ ஏ.காடிர் ஜாசின் சாடினார்.
ஜசெகவுடன் சுமுகமான உறவுகளைக் கொண்டிருந்த பாஸ் கட்சி, பக்காத்தான் ராக்யாட் கூட்டணியில் இருந்து விலகியதும் ஜசெகவை தனது எதிரியாகக் கருதி வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த வகையில் பாஸ் கட்சியின் அரசியல் நிலைப்பாடுதான் என்ன என்பதைப் புரிந்து கொள்ள இயலவில்லை என பெர்சத்து முன்னாள் உச்சமன்ற உறுப்பினருமான அவர் தெரிவித்தார்.
அவ்வப்போது அரசியல் சூழ்நிலைக்கேற்ப தனது நிலைப்பாட்டை பாஸ் கட்சி மாற்றி வருவதால், அந்த இஸ்லாமியக் கட்சியின் சகாக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என அவர் ஆலோசனை கூறினார்.
பக்காத்தான் ராக்யாட் கூட்டணியில் அங்கத்துவம் பெற்றிருந்தபோது ஜசெகவை அந்த இஸ்லாமியக் கட்சி துதிபாடி வந்ததாக அவர் சொன்னார்.
அதே போல் அம்னோ தனது எதிரி என கூறி வந்த பாஸ், தற்போது பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியில் அந்தக் கட்சியுடன் கைகோர்த்துக் கொண்டதாக காடிர் தெரிவித்தார். ஆனால் கடந்த 2018இல் நடந்த 14ஆவது பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து அம்னோவுடன் பாஸ் கைகோர்த்துக் கொண்டதாக அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

3 + 12 =