பாலியல் தொல்லை மசோதா இவ்வாண்டு மக்களவையில் சமர்ப்பிக்கப்படும்

0

பாலியல் தொல்லை மசோதா இவ்வாண்டு மக்களவை கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படும் என மகளிர், குடும்பம், சமூகநல மேம்பாட்டுத்துறை துணையமைச்சர் ஹன்னா இயோ கூறினார்.

வரும் டிசம்பர் 5ஆம் தேதி முடிவடையவிருக்கும் மக்களவை கூட்டத்துக்கு முன்பாகவே முதல் வாசிப்பிற்காக இந்த மசோதா சமர்ப்பிக்கப்படும் என்றார் அவர்.

இந்த மசோதாவை தாக்கல் செய்வதில் தாமதம் ஏற்பட்டால் அடுத்தாண்டு மார்ச் மாதம் தொடங்கும் மக்களவை கூட்டத் தொடரில் சமர்ப்பிக்கப்படும் என அவர் தெரிவித்தார்.
நேற்று புத்ராஜெயாவில் 164 பெண் ஊராட்சிமன்ற உறுப்பினர்களுடன் நடந்த ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சிக்குப் பின் பக்காத்தான் ஹராப்பான் சிகாம்புட் நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் செய்தியாளர்களிடம் இவ்வாறு பேசினார்.
நாட்டில் அதிகமான பாலியல் தொல்லை சம்பவங்கள் பல்கலைக்கழகங்களில்தான் நடைபெறுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

பல்கலைக்கழகங்களில் உள்ள மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் அதிகமான பாலியல் தொல்லைச் சம்பவங்களை எதிர்நோக்கி வருவதாக ஆய்வு ஒன்று காட்டுவதாக அவர் தெரிவித்தார்.
பாலியல் சம்பவங்கள் தொடர்பாக ஒரு குறிப்பிட்ட சட்டம் இல்லாததால், இந்த மசோதா தாக்கல் செய்யப்பட வேண்டிய அவசியம் உள்ளதாக ஹன்னா இயோ தெரிவித்தார். வேலை நேரங்களின் போது நடக்கும் பாலியல் சம்பவங்கள் குறித்து ஒரு சட்டம் வடிவமைக்கப்படும் என ஏற்கெனவே அவர் கூறியிருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

4 + eight =