பாரிஸ்-லண்டன் பேருந்து கவிழ்ந்தது – 33 பயணிகள் காயம்

0

ஞாயிற்றுக்கிழமை பாரிஸ்-லண்டன் தடத்தில் செல்லும் பேருந்து ஒன்று வட பிரான்ஸில் விபத்துக்குள்ளாகி கவிழ்ந்ததில், அதில் பயணித்த 33 பேரில், நால்வர் கடுமையாகக் காயமடைந்தனர்.

மலேசிய நேரப்படி இரவு 7 மணியளவில் அந்தப் பேருந்து பிரான்சின் நெரிசலான சாலையில் கவிழ்ந்தது.

33 பேரில், 29 பேர் லேசான காயத்துக்கு ஆளாகிய்தோடு நால்வர் கடுமையான காயமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

காயமடைந்தோரில், 10 பேர் பிரிட்டனையும் 5 அமெரிக்கர்கள், இருவர் ரோமானியாவைச் சேர்ந்தவர்கள் என்றும் ஸ்பெயின், ஆஸ்திரேலியா, மொரீசியஸ், ஜப்பான் மற்றும் ஶ்ரீலங்காவைச் சேர்ந்த தலா ஒருவரும் அடங்குவர்.

அவர்கள் சிகிச்சைக்காகப் பல்வேறு மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டனர். பேருந்து சேவையை நடத்தும் பிலிக்ஸ்பஸ் நிறுவனம் விபத்துக்கான காரணத்தை ஆராய்ந்து வருவதாகத் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

five × two =