பாகிஸ்தானில் பெட்ரோல், டீசல் விலை அதிரடி குறைப்பு

0

இஸ்லாமாபாத்:

பெட்ரோலிய கச்சா எண்ணையின் விலை சர்வதேச சந்தையில் தொடர்ந்து குறைந்து கொண்டே வரும் நிலையில் இந்த விலைச்சரிவின் பலன்கள் மக்களை சென்று சேரும் வகையில் பெட்ரோல், டீசல், மண்எண்ணை விலையை 5 ரூபாய் வரை குறைக்க இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் அரசு தீர்மானித்துள்ளது.

இதற்கான அறிவிப்பை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் சிறப்பு செய்தி தொடர்பாளர் பிர்தவுஸ் ஆஷிக் அவான் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இம்ரான் கான்

பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான ‘புதிய பாகிஸ்தான்’  அரசு தனது இரண்டாம் ஆண்டில் பயணிக்கும் இவ்வேளையில் மக்களுக்கு மகிழ்ச்சி தரும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவ்வகையில், நாளையில் இருந்து (செப்டம்பர்-1)  பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ.4.59 குறைக்கப்படும். உயர்ரக டீசல் விலை லிட்டர் ஒன்றுக்கு  ரூ.7.67 குறைக்கப்படும். மண்எண்ணை விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ.4.27 குறைக்கப்படும். இலகுரக டீசல் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ.5.63 குறைக்கப்படும் என பாகிஸ்தான் ஊடகங்கள் இன்று செய்தி வெளியிட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

twenty − five =