பழுதுபார்ப்பதற்கான செலவை ஏற்றுக்கொள்வேன்

0

நேற்று முன்தினம் தீயினால் ஒரு பகுதி சேதமடைந்த சுல்தானா அமினா மருத்துவ மனையின் சேதமடைந்த பகுதி யைப் பழுதுபார்ப்பதற்கான செலவுகளை ஏற்றுக் கொள்ள ஜொகூர் ஆட்சியாளர் சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கண்டார் முன்வந்துள்ளார்.
தீயினால் சேதமடைந்த அந்த மருத்துவமனையின் ஒரு பகுதியைச் சரிபார்க்கும் பணியைத் தொடங்கும்படி தமது குத்தகையாளருக்கு தாம் உத்தரவிட்டுள்ளதாக அவர் சொன்னார்.
இந்த பழுதுபார்க்கும் பணிக்கு பொதுச் சேவை இலாகா, தீயணைப்பு மற்றும் மீட்பு இலாகா மற்றும் சுகாதார இலாகா உதவ வேண்டும் என்றார் அவர்.
பழுதுபார்ப்பதற்கான அனைத்துச் செலவுகளையும் ஜொகூர் சுல்தான் இப்ராஹிம் அறவாரியம் ஏற்றுக் கொள்ளும் என அவர் குறிப்பிட்டார்.
“இந்த விவகாரத்தில் புத்ராஜெயாவை நான் குறைகூறவில்லை. பழுதுபார்க்கும் பணி உடனே தொடங்க வேண்டும் எனப்துதான் எனது விருப்பமாகும்” என அவர் குறிப்பிட்டார்.
காரணம் நோயாளிகளின் நலனுக்குத்தான் முன்னுரிமையும் முக்கியத்துவமும் வழங்க வேண்டும் என சுல்தான் இப்ராஹிம் தெரிவித்தார்.
நேற்று முன்தினம் அந்த மருத்துவமனையின் பெண்கள் வார்ட்டில் தீப்பிடித்தது. 15 நிமிடங்களில் இத்தீ அணைக்கப்பட்டது.
இந்தச் சம்பவத்தில் உயிர், உடற்சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை.
ஜொகூரை மத்திய அரசாங்கம் ஓரங்கட்டி வருவதாக ஜொகூர் பட்டத்து இளவரசர் துங்கு இஸ்மாயில் குற்றஞ்சாட்டியதைத் தொடர்ந்து பழுதுபார்க்கும் செலவை ஏற்றுக் கொள்ள சுல்தான் இப்ராஹிம் முன்வந்தார்.
ஜொகூர்பாருவில் ஒரு புதிய மருத்துவமனையைக் கட்டவும் நடப்பில் உள்ள மருத்துவமனையை மேம்படுத்தவும் கடந்த 2016இல் தாமும் தமது பெற்றோரும் பேசியிருந்ததாக துங்கு இஸ்மாயில் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

14 − 9 =