பள்ளி மாணவர்களின் போக்குவரத்துக்கு உதவினார் டத்தோ ரவி

அக்டோபர் மாதம் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுவதால் பெற்றோர்களின் சுமையைக் குறைக்கும் வகையில் ஸ்ரீ தஞ்சோங் சட்டமன்ற உறுப்பினர் டத்தோ ரவி முனுசாமி ஸ்ரீ தஞ்சோங் பகுதி யில் உள்ள அனைத்து பள்ளி மாணவர்களின் போக்குவரத்து செலவுகளை குறைக்கும் வகை யில் தேர்ந்தெடுக்கப்பட்ட பெற் றோர்களுக்கு நிதியுதவிகளை எடுத்து வழங்கினார். இத்திட்டம் நெகிரி செம்பிலான் மாநிலத்தின் திட்டங்களில் ஒன்றாகும். இத்திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு மாணவர்களுக்கும் சுமார் 300 வெள்ளியை டத்தோ ரவி நன்கொடையாக வழங்கினார். அதுமட்டுமின்றி, நவம்பர் மாதத்தில் இம்மாணவர்களுக்கு மேலும் 250 வெள்ளியை நிதியுதவியாக வழங்க நெகிரி செம்பிலான் அரசு இலக்கு கொண்டுள்ளதாக டத்தோ ரவி கூறினார். இத்திட்டத்தின் கீழ், ஸ்ரீ தஞ்சோங் பகுதியைச் சேர்ந்த சுமார் 35 நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. “இத்திட்டம் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும்போது கோவிட்-19 தாக்கத்தால் பாதிக்கப்பட்ட பெற்றோர்களின் சுமையைக் குறைக்க உதவும். இந்த உதவியை வழங்கிய நெகிரி செம்பிலான் மந்திரி பெசாரான டத்தோ ஸ்ரீ ஹாஜி அமினுடீன் பின் ஹருணுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். “இந்த உதவியைத் தவிர்த்து, ஸ்ரீ தஞ்சோங் பகுதியிலுள்ள குடியிருப்பாளர்களுக்கு சமையல் பொருள்களையும் நாங்கள் நன்கொடை வழங்கியுள்ளோம். அதுமட்டுமின்றி, இதுவரை 4200 உதவி வவுச்சர்களும் பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்களுக்கு வழங்கப்பட் டுள்ளது” என்றார் அவர். “போக்குவரத்து செலவுகளை ஈடு செய்வது மட்டுமின்றி, நாங்கள் பள்ளி மாணவர்களுக்காக பள்ளி சீருடைகளையும் வழங்க திட்டமிட்டுள்ளோம். “இந்த பள்ளி சீருடைவழங்கும் திட்டமானது சுமார் 700 பள்ளி மாணவர்களுக்கு பயனடையும் என்று நாங்கள் நம்புகின்றோம். தேவைப்பட்டால் இந்த எண்ணிக்கை ஆயிரமாக உயரும். “அனைத்து குடியிருப்பாளர் களின் பிரச்சினைகளை தீர்ப்பதில் நானும் எனது குழுவினர்களும் அயராது உழைத்து வருகின்றோம். ஆகவே, அனைவரும் ஸ்ரீ தஞ்சோங் சட்டமன்றத்தில் உள்ள அனைத்து உதவிகளையும் சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என்று அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

three + 12 =