பள்ளி மாணவர்களிடையே முகக் கவசம் அணிவது கட்டாயம் ஆக்கப்படவில்லை

0

வகுப்புகளில் பாடங்கள் நடக்கும்போது மாணவர்கள் முகக்கவசங்களை கட்டாயம் அணிவது பற்றி அரசாங்கம் இது வரை எந்தவொரு முடிவும் எடுக்க வில்லை.ஏனெனில் வசதி குறைந்த பெற்றோர்களின் பணச்சுமை அது மேலும் அதிகரிக்கும் என தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கூறினார்.
அதோடு மட்டுமல்லாமல் கோவிட் – 19 பரவலைத் தடுப்ப தற்கு சுகாதாரத்தைப் பேணும் வழிகாட்டிகளையும் விதிமுறை களையும் அனுக்கமாகப் பின்பற்று மாறு பள்ளிக்கூடங்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் மேலும் கூறினார்.
பள்ளி மாணவர்களுக்கு முகக்கவசங்கள் அணிவதை இன்னும் கட்டாயமாக்கப்பட வில்லை. ஏனெனில் பள்ளிக் கூடங்களில் நிர்ணயிக்கப்பட்ட செயல்பாட்டு தர விதிமுறை களின் படி (எஸ்.ஓ.பி.) சமூக இடைவெளி மிகவும் அணுக்க மாக கண்காணிக்கப்பட்டு பின்பற்றப்படுகிறது. எனினும் மாணவர்கள் முகக்கவசங்கள் அணிவதை ஊக்குவிக்கப்படு கின்றனர். இதைத் தவிர மாணவர்கள் திரும்பத் திரும்ப பயன்படுத்தக் கூடிய முகக்கவசங்களை அணி வது பற்றி சுகாதார அமைச்சு ஆராய்ந்து கொண்டு இருக்கிறது. மேலும் பள்ளிக்கூடங்களில் முகக்கவசங்களை அணிவதை கட்டாயமாக்கப்பட்டால் அது பெற்றோரின் பணச்சுமையை அதிகரிக்கும் தினசரி ரிங்கிட் ஒன்று கொடுத்து முகக்கவசங்களை ஏழை குடும்பங்களால் வாங்க முடியாது.
பள்ளிக் கூடங்களில் முகக் கவசங்களின் பயன்பாடு குறித்து கேட்டபோது அமைச்சர் இஸ்மாயில் இதனை மலேசியா கினியிடம் நேற்று முன்தினம் (வியாழக்கிழமை) தெரிவித்தார். இதற்கிடையே பள்ளி மாண வர்களுக்கு கட்டாயம் முகக் கவசம் அணிவது பற்றி கல்வி அமைச்சு இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை என கல்வியமைச்சர் ராட்ஸி ஜிடின் கடந்த செவ்வாய்க்கிழமையன்று மக்களவையில் கூறியிருந்தார்.
பள்ளி மாணவர்களிடையே திரும்பத் திரும்ப பயன்படுத்தக் கூடிய முகக்கவசங்களின் சாத்தி யங்கள் பற்றி கல்வி அமைச்சு விவாதித்துக் கொண்டிருப்பதாக அமைச்சர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

4 × 4 =