பள்ளிகளை மூடவும், கூட்டம் கூடுவதற்குத் தடையும் வரலாம்; உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை

0

கோவிட் -19 தொற்று நோய் பல நாடுகளிலும் வெகு வேகமாகப் பரவி வருவதால் பள்ளிகளை மூடவும் மக்கள் பெருவாரியாகக் கூடும் கூட்டங்களைத் தடை செய்யவும்படலாம் என உலக சுகாதார நிறுவனத்தின் வட்டார பிரதிநிதியான டாக்டர் தாக்கேஸி காசாய் அறிவித்துள்ளார்.
சீனாவுக்கு வெளியே, ஒரே நேரத்தில் பலருக்கு அந்த நோய் கண்டிருப்பது பெரும் கவலையை ஏற்படுத்துவதாகவும் முன்னர் குறிப்பிட்டதற்கு மாறாக, விரைவாகப் பரவும் தன்மை கொண்டு பேராபத்தை விளைவிக்கும் என நம்பப்படுகிறது.
எனவே, பேரழிவைத் தடுக்கும் விதத்தில் தயார் நடவடிக்கைகளை அரசுகள் எடுக்க வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டார்.
இதன் அடிப்படையில், பள்ளிக்கூடங்களை மூடவும், மக்கள் பெருவாரியாகக் கூடும் கூட்டங்களைத் தடை செய்யவும் நேரிடலாம் என்றும் அவர் எச்சரித்தார்.
இது புது வகையான நோயாக இருப்பதால், அதன் தாக்கம் எந்த அளவுக்கு இருக்கும் என்பது தெரியாத நிலையில், எந்தவிதமான ஆபத்தையும் சமாளிக்கத் தயார் நிலையில் இருக்க வேண்டும்.
மேலும் இந்நோயினால் கடுமையாகப் பீடிக்கப்பட்டவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து சிகிச்சை அளிக்கவும், அவர்களைத் தனிமைப் படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
பல இடங்களிலும் சிகிச்சை அளிக்க சுகாதார நடவடிக்கைகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டுமென காசாய் கேட்டுக் கொண்டார்.
சீனாவில் இந்நோயினால் பாதிக்கப்பட்டோரில் 2 விழுக் காட்டினர் மரணமடைந்த வேளையில் ஹுபேய்க்கு வெளியே 0.4 விழுக்காட்டினர் மரணமடைந்து ள்ளதாக காசாய் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

10 − 4 =