பள்ளிகளுக்கான வரையறுக்கப்பட்ட நெறிமுறைகள்

அக்டோபர் மாதம் பள்ளிகள் திறக்கப்படும்போது மாணவர்கள் அனுசரிக்கப்பட வேண்டிய வரை வரையறுக்கப்பட்ட நெறி முறைகளைக் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அது கீழ்க் கண்டவாறு இருக்கும்: 1. வகுப்பறையில் 50 விழுக் காடு மாணவர்கள் மட்டுமே இருக்க வேண்டும். ஒரு நாளில் இரண்டு முறை மாணவர்கள் மாறி மாறி கல்வி கற்பர். ஒவ்வொரு வகுப்பிலும் பாதி மாணவர்கள் இருக்க வேண்டும் இந்த முறை யான ஒவ்வொரு வாரமும் மாற்றப் பட வேண்டும். 2. ஒரு மேசை விட்டு அடுத்த மேசை மாணவர்கள் அமர்ந்து பாடங்களைப் படிக்க வேண்டும். அதன் மூலம் கோவிட் தொற்று பரவுவதைத் தடுக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது வகுப்பறைகளில் காற்றோட்டம் இருக்குமாறு பார்த்துக் கொள் ளப்பட வேண்டும். மின் விசிறி பொருத்தப்பட்டு காற்றோட்டம் சீராக இருக்க வகை செய்யப்பட வேண்டும். 3. வகுப்பறையில் பாடம் கற்கும்போது மாணவர்கள் முகக்கவசத்தைக் கட்டாயமாக அணிதல் வேண்டும். இரு முகக் கவசங்களை அணிவதற்கு ஊக்க மளிக்க வேண்டும். . 4. இடைவேளையின்போது, மாணவர்கள் வகுப்பறையில் அமர்ந்து உணவுண்ண வேண்டும். வகுப்பறையில் குளிர்சாதன வசதி இல்லை என்றால் வெளிப்புறத்தில் மாணவர்கள் அமர்ந்து உணவுண் ணும்போது, ஆசிரியர்கள் கண் காணிப்பில் அமர்த்தப்பட வேண்டும். 4.மாலை வேளைகளில் புறப்பாட நடவடிக்கைகளுக்கு அனுமதியில்லை. 5. உடற்பயிற்சி செய்வதற்கு அனுமதி உண்டு. ஆனால், மாணவர்கள் அதற்கான உடை களை வீட்டிலிருந்தே அணிந்து வரவேண்டும். 6. நோய் உள்ளவர்கள் வீட்டில் இருந்து பள்ளிக்கூடங்களுக்கு வர அனுமதிக்கக் கூடாது. வகுப்பில் தொற்றின் அறிகுறி காணப்பட்டால், உடனடியாக கோவிட்-19 பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும். 7. பள்ளிகளில் பள்ளி சீருடை அணிவது கட்டாயமில்லை. ஆனால், அணிந்துவரும் உடை சுத்தமாக இருப்பது அவசியமாகும். 8. பள்ளியில் படிக்கும் போது அவர் களுக்கு மூன்று முறை உமிழ் நீர் சோதனை நடத்தப்பட வேண்டும். பள்ளிக்கு வருவதற்கு முன்னர், ஆறாவது நாள், இறுதியாக 14ஆவது நாள் ஆகிய நாள்களில் அதனை மேற்கொள்ள வேண்டும் வகுப்பறைகளில் போதுமான வெளிச்சமும் காற்றோட்டமும் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மீட்புத் திட்டத்தின் முதல் கட்டத்தில் அனைத்துப் பள்ளிகளும் மூடியே இருக்க வேண்டும் இரண்டாம் கட்டம்: அரசாங்க தேர்வுகளை எழுத விருக்கும் மாணவர்களுக்கு நேர்முகப் போதனை நடத்தப்பட வேண்டும். முதலில், ஆறாம் படிவ, இரண்டாம் செமஸ்டரில் பயிலும் மாணவர்களுக்கு, அனைத்துலக டிப்ளோமா தேர்வினை எடுக்கும் இரண்டாண்டு மாணவகள், பல்கலைக்கழக புகுமுக வகுப்பில் பயிலும் 3ஆம் செமஸ்டர் மாணவர்கள், சிறப்பு சிறப்புத் தகுதி உள்ள மாணவர்கள் ஆகியோருக்கு நேர்முகப் பாடங்கள் போதிக்கப்பட வேண்டும். இதனையடுத்து மற்ற பிரிவு மாணவர்கள் அனைவரும் வீட்டி லிருந்தபடியே இணையதளத்தின் வாயிலாகப் பாடங்களைப் பயில வேண்டும் மூன்றாம் கட்டம்: இரண்டாவது செமஸ்டரில் உள்ள ஆறாம் படிவ மாணவர்கள், ஐபிடி வகுப்பில் உள்ள இரண்டாம் ஆண்டு மாணவர்கள், பல்கலைக் கழக புகுமுக வகுப்பில் பயிலும் மாணவர்கள், விளையாட்டு சம்பந்தமான துறைகளில் மயிலும் மூன்றாமாண்டு செமஸ்டரில் படிக்கும் மாணவர்கள், சிறப்பு பிரிவு மாணவர்கள், அனைத்துலக ரீதியில் தேர்வு எழுதும் மாணவர்கள் எஸ்பி எம், மேல்நிலைத் தேர்வு (எஸ் ஸி பிஎம்) மலேசியாவில் உள்ள அரசு, தனியார் துறை மாணவர்களும் கல்வி பயில அனுமதிக்கப்படுவார் நான்காவது கட்டம்: டிசம்பர் அல்லது 3, 4ஆம் தேதி தொடக்கம், பள்ளி மாணவர் களுக்கு நேர்முகப் பாட போதனை நடத்தப்படும் தனியார் துறை நடத்தும் மழலையர் பள்ளிகள் இந்தக் கட்டத்தில் நேர்முக பாடங்களை பயில்வர். 17ஆம் தேதி முதல் முதலாம் இரண்டாம் மூன்றாம் வகுப்பு மாணவர்கள் நேர்முகப் போதனையில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர். அக்டோபர் 31ஆம் தேதிக்குப் பின்னர், நான்காம், ஐந்தாம், ஆறாம் வகுப்பு மாணவர்கள் நேர்முகப் பாட போதனையில் கல்வி பயில்வர். அக்டோபர் 30ஆம் தேதி தொடங்கி, தங்குமிட பள்ளிகளில் பயிலும் மாணவர்கள், தனியார் பள்ளிகள், அனைத்துலகப் பள்ளிகள், வெளிநாட்டு நிபுணத்துவ தொழில்துறையில் உள்ளோரின் குழந்தைகள் யாவரும் நேர்முகப் பாடங்களைக் கற்பர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

20 − twenty =