பள்ளிகளில் எஸ்ஓபி பின்பற்றப்படுவதை போலீஸார் கண்காணிக்கின்றனர்

புத்ராஜெயாவிலுள்ள 11 இடை நிலைப்பள்ளிகளில் மீட்சிக்கான நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவு முழுமையாகக் கடைப்பிடிப்பதை உறுதி செய்ய 22 போலீஸ் அதிகாரிகள் நியமிக்கப் பட்டுள்ளனர்.
2 போலீஸ் அதிகாரிகள் ஒவ்வொரு பள்ளியிலும் காலை 7.30 மணியில் இருந்து பிற்பகல் 2.00 மணிவரை ஒவ்வொரு திங்கள்கிழமையிலும் பணியாற்றுவார்கள் என்று புத்ராஜெயா வட்டார போலீஸ் படைத் தலைவர் முகமட் ஃபாட்ஸில் அலி நேற்று கூறினார்.
முன்பு பாதுகாப்பு குற்றச் செயல்களைக் கண்காணிப்பத ற்கு மாதம் இருமுறை அப்பள்ளி களுக்கு அவர்கள் வருகை புரிந்தனர்.
பள்ளிகளில் எஸ்ஓபி பின்பற்றப்படுவதை இவர்கள் உறுதிசெய்வார்கள். தேவை ஏற்பட்டால் பள்ளி நிர்வாகத்திற்கு ஆலோசனைகள் வழங்குவார்கள் என்று பிரெசின்ட் 8 (1) உயர் நிலைப்பள்ளிக்கு வருகையளித்த பின் அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.
புத்ராஜெயாவில் உள்ள பள்ளிகளில் எஸ்ஓபி மீறல் பற்றி எந்தப் புகாரும் பெறப்படவில்லை. இது தமக்கு மனநிறைவளிப்ப தாக அவர் குறிப்பிட்டார்.
இதனிடையே நாடுமுழுவதும் உள்ள இடைநிலைப்பள்ளிகளில் படிவம் 5, படிவம் 6 மாணவர்கள் பள்ளிகளுக்குத் திரும்பினர். மாணவர்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டது. ஆரோக்கியமான மாணவர்கள் பள்ளிகளுக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். ஆரோக்கியமற்ற அறிகுறிகள் தென்படும் மாணவர்கள் விட்டிற்குத் திரும்பிச் செல்லும்படி அறிவுறுத்தப்பட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here