பல்கலைக்கழகத் திறப்புக்கு குறுகிய கால அறிவிப்பு: மாணவர்களுக்கு சுமையே?

குறுகிய கால அறிவிப்புடன் பல்கலைக்கழகங்களை மீண்டும் திறப்பது மாணவர்களுக்கும் பெற்றோருக்கும் கடும் நிதிப் பிரச்சினையை ஏற்படுத்தும் என்று இளைஞர், விளையாட்டுத் துறை முன்னாள் அமைச்சர் சைட் சாடிக் சைட் அப்துல் ரஹ்மான் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாண்டு டிசம்பர் 31 வரை மாணவர்கள் இணையதளத்தின் வழியாகப் பாடங்களைப் பயிலலாம் என்று அறிவித்ததற்கு முரணாக இந்தப் புதிய அறிவிப்பு இருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இது சம்பந்தமாகப் பல மாணவர்கள் தமக்குப் புகார்கள் அனுப்பியிருப் பதாகக் குறிப்பிட்ட அவர், பல்கலைக்கழகங்களின் தங்குமிடங்கள், வாடகை வீடுகள் ஆகியவற்றிலிருந்து வாடகைத் தவணையை நிறுத்திக் கொண்டு, வீடு திரும்பிய மாணவர்கள் மீண்டும் குறுகிய காலத்திலேயே வாடகை வீடுகளுக்காக அலைய வேண்டிய நிலைக்குத் தள்ளப் பட்டுள்ளனர்.
பலர் அதிக செலவிட்டு சொந்த ஊர்களுக்குச் சென்ற பின்னர், மேலும் செலவிட்டு மீண்டும் பல்கலைக் கழகத்துக்குத் திரும்ப வேண்டும். சபா, சரவாக் மாணவர்களுக்கும் அங்கு பயிலும் தீபகற்ப மலேசிய மாணவர்களுக்கும் இது பெரும் நிதிப் பிரச்சினையை உண்டாக்கும் என்று சைட் சாடிக் கவலை தெரிவித்தார்.
பல்கலைக்கழகங்கள் மீண்டும் திறக்கப்பட்டு பாட போதனைகள் நடத்தப்படுவது அவசியம் என்றாலும், இது சம்பந்தமாக மாணவர்கள், விரிவுரையாளர்கள், பல்கலைக்கழக நிர்வாகங்களுடன் கல்வி அமைச்சு கலந்தாய்வு செய்திருக்க வேண்டுமென்றும் அவர் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

13 + seventeen =