பலகை திரையரங்கு தீயில் சேதமாகியது

0

லாவாஸ், செப்.17-
இங்குள்ள ஜாலான் டத்து தையில் இருக்கும் பழைய திரைய ரங்கு ஒன்று நேற்று முன்தினம் இரவு 9.15 மணியளவில் ஏற்பட்ட தீயில் சேதமாகியது.
அத்திரையரங்கு சில காலமாக கைவிடப்பட்ட நிலையில் இருந்து வந்துள்ளது. சம்பவத்தன்று அத்திரையரங்கு அருகில் சீன சமூகத்தின் தங்லோங் விளக்கு திருவிழா கொண்டாடப்பட்டுள்ளது.
விளக்கு விழா கொண்டாடிக் கொண்டிருந்த இடையில் அங்கு யாரும் காணாத வகையில் தீ ஏற்பட்டுள்ளது. அத்தீ பரவி அருகிலுள்ள பலகை திரையரங்கை பற்றிக் கொண்டுள்ளது.
தீச் சம்பவம் தீயணைப்பு மற்றும்
மீட்புப் படையினருக்கு தெரியப்படுத் தப்பட்டுள்ளது. மீட்புப் படை அங்கு சென்று சேர்வதற்குள் பழமை யான பலகையால் ஆன அத்திரையரங் கின் மேல் மாடி தீயில் முற்றிலும் அழிந்து விட்டது என்று மீட்புப் படை பேச்சாளர் ஒருவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

1 × 5 =