பர்கத் ஃபுட்ஸ் குழுமத்தின் புதிய அறிமுகம் ’சரினா

0

தனது எண்பதாவது ஆண்டு விழாவை நோக்கி நகர்ந்து வரும் பர்கத் ஃபுட்ஸ் குழுமம், தங்களது வாடிக்கையாளர்களுக்காக பல்வேறு உணவு பொருட்களை தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகிறது.
சர்வதேச தரம் வாய்ந்த உணவு
பொருட்களை தனது வாடிக் கையாளர்களுக்கு வழங்குவது மட்டுமல்லாது பல்வேறு நாடு களுக்கு ஏற்றுமதியும் இந்நிறுவனம் செய்து வருகிறது. ஹேக்ஸ் மிட்டாய், சன் குயிக் பழச்சாறு போன்ற பல்வேறு தரமான உணவுப் பொருட்களுக்ளைத் தொடர்ந்து சார்டின் மீன்களை அறிமுகப்படுத்தியிருக்கிறது.
அண்மையில், தலைநகரில் உள்ள மைன்ஸ் கண்காட்சி மையத் தில் பர்கத் ஃபுட்ஸ் குழுமத் தின் சார்பில் சரினா சார்டின் அறிமுகப் படுத்தப்பட்டது.
இந்த அறிமுக விழாவில் மத்திய அமைச்சர் டத்தோ ஸ்ரீ டாக்டர் முஜாஹிட் யூசுஃப் ராவா சிறப்பு விருந்தினராக கலந்து சிறப்பித்தார்.
இவ்விழாவில் பர்கத் ஃபுட்ஸ் குழுமத்தின் தலைவர் டத்தோ ஸ்ரீ பர்கத் அலி பேசுகையில், மலேசியா முழுவதும் பரவியுள்ள எங்கள் வாடிக்கையாளர்களுக்கு தரமான சார்டின் மீன்களை சரினா எனும் பெயரில் அறிமுகப்படுத்துவதில் எங்கள் குழுமம் மகிழ்ச்சி கொள்கிறது என தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here