பரிசுக்கூடைகள் வேண்டாம்; ரொக்கப் பற்றுச்சீட்டுகளை வழங்குங்கள்

0

வசதி குறைந்தவர்களுக்கு பரிசுக் கூடைகளை விட ரொக்கப் பற்றுச்சீட்டுகளை வழங்கலாம் என ஜசெக, பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் சதீஷ் முனியாண்டி பரிந்துரைத்தார்.
பினாங்கு மாநிலத்தில் ‘ஸக்காட் பினாங்கு’ போன்ற சமூகநல அமைப்புகள் நோன்பு மாதம் மற்றும் விழாக்காலங்களில் இது போன்ற பரிசுக்கூடைகளை வழங்குவது காலத்திற்கு அப்பாற்பட்டது என அவர் சுட்டிக்காட்டினார்.


“எனது தொகுதியில் 20 விழுக்காடு முஸ்லிம் வாக்காளர்கள் உள்ளனர். ஸக்காட் நிதி இவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் என நான் நம்புகிறேன்” என்றார் அவர்.
வசதி குறைந்தவர்களின் குடும்பங்களின் சுமையை ஸக்காட் நிதி குறைக்கும் என்பதில் சந்தேகம் எதுவும் இல்லை என அவர் சொன்னார்.


ஆகையால் நோன்பு மாதம் மற்றும் விழாக்காலங்களில் இவர்களுக்கு உதவும் வகையில் ரொக்கப் பற்றுச்சீட்டுகள் வழங்கப்பட வேண்டும் என அவர் தெரிவித்தார். இவர்களுக்கு அரிசி, எண்ணெய், ரொட்டி மற்றும் இதர உணவுப் பொருட்களை கொடுக்க வேண்டாம். இது காலத்திற்கு அப்பாற்பட்ட ஒரு நடைமுறை என அவர் சொன்னார்.


ரொக்கப் பற்றுச்சீட்டு வழங்கினால் இவர்கள் தங்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கிக்கொள்ள முடியும் என சதீஷ் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

five + nineteen =