பயண, சுற்றுலா மேம்பாடுகளை அதிகரிக்கும் மாட்டா

0

மலேசிய சுற்றுலா மற்றும் பயண முகவர்கள் சங்கம் (மாட்டா) உள்நாட்டு பயணங்களை அதிகரிக்கும் வகையில் ஒரு புதிய முயற்சியாக ஆன்லைன் கண்காட்சி 2020 எனும் பிரச்சாரத்தை அறிவித்துள்ளது.
தற்போதைய உள்நாட்டு பயண தேவைக்கு ஏற்ப பல்வேறு தள்ளுபடிகளுடன் இந்த சுற்றுலா தொகுப்பு அமைந்துள்ளது. மேலும், மாட்டா பல்வேறு பயண பங்காளிகளின் ஒத்துழைப்புடன் இந்த ஆண்டு செப்டம்பர் 9 முதல் 15 வரை இந்த சலுகையை ஏற்பாடு செய்துள்ளது என்று மாட்டா தலைவர் டத்தோ டான் கொக் லியாங் தெரிவித்தார்.
மலேசிய சுற்றுலா துறை, மலேசியா ஏர்லைன்ஸ், பினாங்கு சுற்றுலா தலம், மலேசிய ஹோட்டல்கள் சங்கள், மலேசிய கேளிக்கை பூங்கா மற்றும் பிற மாநில சுற்றுலா அலுவலகங்கள் உள்ளிட்ட ஆதரவாளர்கள் மற்றும் கூட்டாளர்களுடன் மாட்டா நெருக்கமாக பணியாற்றி வருகிறது. “இந்த புதிய பிரசாரத்தின் மூலம் வாடிக்கையாளர்கள் குறைந்த கட்டண சலுகைகளோடு புதிய அனுபவத்தையும் பெறுவார்கள்” என அவர் நேற்று ஓர் அறிக்கையில் கூறினார். கோவிட்-19 தொற்றுநோய் காரணமாக சவாலான சூழ்நிலைகள் இருந்தபோதிலும் மாட்டாவால் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த பிரச்சாரத்திற்காக அனைத்து கூட்டாளர்களும் கடுமையாக உழைக்கிறார்கள் என்றும் அவர் கூறினார்.
நிகழ்வு பங்கேற்புக்கான பதிவு இன்று முதல் ஆகஸ்ட் 10 வரை நடைபெறும். மேல் விவரங்களுக்கு, பொது மக்கள் அதிகாரப்பூர்வ ஆஹகூகூஹ முகநூல் பக்கத்தை @அயவவயகயசைமரயடயடரஅயீரச பார்வையிடவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

4 × two =