பயணிகளைப் போல் பிரயாணம் செய்யும் ஜேபிஜே ஊழியர்கள்

0

நேற்று முன்தினம் தொடங்கி வரும் 2 பிப்ரவரி வரை நடைபெறவுள்ள ‘ஓப்ஸ் சீனப் பெருநாள்’ நடவடிக்கையின் போது பேருந்து ஓட்டுநர்களின் குற்றச் செயல்களை கண்டு பிடிப்பதற்காக மலாக்காவைச் சேர்ந்த 56 ஜேபிஜே சாலை போக்கு வரத்து இலாகாவைச் சேர்ந்த உறுப்பினர்கள் பேருந்து பயணிகளைப் போல் வேடமிட்டு பிரயாணம் செய்வர் என்று இயக்குனர் முகம்மது ஃபிர்டாவுஸ் ஷாரிஃப் கூறினார்.

வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு பகுதிகளுக்கு செல்லவுள்ள பேருந்துகளில் இந்த ஜேபிஜே ஊழியர்கள் பயணிகளைப் போல் பிரயாணம் செய்வர். ஓட்டுநர்களின் குற்றச் செயல்களை கண்காணிப்பது தவிர செலுத்தப்படாத சம்மன் களை கொண்டுள்ள பேருந்து நிறுவனங்கள் மீதும் இந்த ஜேபிஜே ஊழியர்கள் சோதனை மேற்கொள்வர். கனரக வாகனங்கள் தடை செய்யப்பட்டுள்ள ஜனவரி 23, 24, 27 மற்றும் 28 ஆம் தேதிகளில் தடையை பின்பற்றாத கனரக வாகனங்கள் மீதும் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
4 மணி நேர அல்லது 300 கிலோ மீட்டர் தூரத்திற்கு பயணம் செய்யும் பேருந்துகளில் இரண்டாவது ஓட்டுநர் இல்லாவிட்டாலும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

11 + 8 =