பயணச் செலவை அரசு ஏற்றுக் கொள்ளாதது ஏன்?

0

கோலாலம்பூர், மார்ச். 23-
பேரிடர் காலத்தில் அந்நிய நாட்டில் தவிக்கும் மக்களை மீட்டு கொண்டு வரும் பொறுப்பு ஒரு நாட்டின் கடமையாகும். அதற்காக பேரிடர் நிதியாக கோடிக் கணக்கில் பணம் ஒதுக்கப்படுகிறது. இந்நிலையில் இந்தியாவில் சிக்கிக் கொண்டவர்களை மீட்டு கொண்டு வரும் விமானச் செலவை அரசாங்கம் ஏற்றுக் கொள்ளாமல் அந்த சுமையை மஇகா ஏற்று கொள்ளும் நிலை ஏன் ஏற்பட்டது என கேள்வி எழுந்துள்ளது. மலேசிய அரசு நடமாட்டக் கட்டுப்பாடு மற்றும் விசா ரத்து உத்தரவு பிறப்பித்தப் பிறகு பெரும்
பான்மை விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. இதனால்,
வெளிநாடுகளுக்கு சென்றபயணிகள் பெரும் அவதிக்குள்
ளாகியுள்ளனர். அதில் இந்தியா விற்கு சுற்றுலா மற்றும் புனித யாத்திரைக்குச் சென்றவர்கள் அடங்குவர் . அவர்களை மீண்டும் நாட்டுக்கு கொண்டு வர மலேசிய வெளியுறவு அமைச்சு அங்குள்ள மலேசிய தூதரகத்தின் வழி ஏற்பாடுகள் செய்தது. அதற்கு மலேசிய தூதரகத்தின் அதிகாரி கே.சரவணன் பொறுப்பேற்று செயல்பட்டார். இந்தியா குறிப்பாக தமிழகத் தில் சிக்கியிருந்த பயணிகள் நேற்று விடியற்காலை நாடு திரும்
பினர். இதில் முதல் கட்டமாக சென்னை மற்றும் திருச்சியில் இருந்து மொத்தம் 369 பயணி கள் காலை 5.30 மணிக்கு கோலாலம்பூர் விமான நிலையத் தை வந்தடைந்தனர்.மஇகாவின் கோரிக்கையை ஏற்று வெளியுறவு அமைச்சர் ஏர் ஆசியாவுடன் தொடர்பு கொண்டு அங்கு சிக்கியவர்களைக் கொண்டு வர ஏற்பாடு செய்ததாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
மொத்தம் ஆறு விமானங்களில் இந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகளை இங்கு கொண்டு வர வேண்டும்.அதற்கான மொத்தத் தொகையான 10.5 லட்சம் வெள்ளி செலவை மஇகா ஏற்றுக் கொண்டு உள்ளதாக அதன் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன் கூறியிருந்தார்.

இந்தியாவில் சிக்கிய மலேசிய பயணிகள்

மலேசிய தூதரகத்தின் தகவலின் படி சென்னையில் 450, திருச்சியில் 430, டெல்லியில் 97, பெங்களூரில் 63, மும்பாயில் 24, கொச்சினில் 13 என மொத்தம் 1,070 பேர் இந்தியாவில் சிக்கியிருப்பதாக பதிவு செய்து கொண்டனர்.

பேரிடர் கால மீட்பு நடவடிக்கை

ஒரு பேரிடர் காலத்தில் அந்நிய நாட்டில் சிக்கிக் கொண்டவர்களை தாய்நாட்டிற்கு திருப்பிக் கொண்டுவருவது அந்த அந்த நாட்டின் கடமையாகும். இது வெளியுறவு அமைச்சின் தலையாய பொறுப்பு ஆகும். பல நேரங்களில் நமது அரசு மேற்கொண்ட பயணிகள் மீட்புப் பணி தொடர்பான தகவல்களை நாம் ஊடகங்களின் வாயிலாக படித்தும், அறிந்தும் வருகின்றோம்.
மலேசியா மட்டும் அன்றி உலக நாடுகள் அனைத்தும் தம் நாட்டு மக்களுக்கு பேரிடர் காலத்தில் செய்ய வேண்டிய கடமை இதுவாகும். உதாரணத்திற்கு, ஈரான் நாட்டில் கோவிட் -19 பரவி இருப்பது தெரியவந்தவுடனேயே இந்திய மத்திய அமைச்சு அந்நாட்டில் இருந்த 58 இந்திய குடிமக்களை திரும்ப அழைத்துவர ஏற்பாடுகள் செய்துவிட்டது.
இதற்கு முன்னதாக சிறப்பு விமானங்களின் மூலம் 654 பேரை சீனாவின் வுஹானில் இருந்து மீட்டுக் கொண்டு வந்தது. இந்தியா மீட்டுக் கொண்டுவந்த இந்திய குடிக்களோடு மாலத்தீவு, மியன்மார், வங்காளதேசம், அமெரிக்கா, மடகஸ்கார், இலங்கை, நேப்பாளம், தென் அமெரிக்கா, பெரு ஆகிய நாட்டவர்களையும் வுஹானில் இருந்து மீட்டுக் கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, இந்தியாவைச் சேர்ந்த மாணவர்கள் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் சிக்கிக் கொண்ட பொழுது அவர்களுக்கும் உடனடியாக மாற்று ஏற்பாடுகள் செய்து இந்தியாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இவை அனைத்தையும் உடனுக்குடன் செய்து முடித்தவர் இந்தியாவின் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் சுப்ரமணியம்.
அதே போன்று இந்த பேரிடர் காலத்தில் மலேசியர்கள் அனைவரையும் மலேசிய நாட்டிற்கு திருப்பி கொண்டு வருவது மலேசிய அரசின் பொதுவான கடமையாகும். இதை இன ரீதியாகவோ, மத ரீதியாகவோ பார்ப்பது கண்டனத்திற்குரியது.
ஆனால், இந்தியாவில் சிக்கிக் கொண்ட மலேசியர்களை திரும்ப கொண்டு வருவதற்காக மஇகா தேசியத்தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன், வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ ஹிஷாமுடின் துன் ஹுசேன் ஓனைத் தொடர்பு கொண்டு வேண்டிய ஏற்பாடுகளுக்கு முறையிட்டிருந்தார் என்ற செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
மேலும், சென்னையிலிருந்தும் திருச்சியில் இருந்தும் சிக்கிய பயணிகளை ஆறு விமானங்களில் கொண்டு வருவதற்கு மொத்த செலவு சுமார் 10 லட்சம் வெள்ளி பயணச் செலவை மஇகா ஏற்றுக் கொண்டு இருப்பது அதைவிட அதிர்ச்சி தரும் தகவலாக அமைகிறது.
இந்த பயணச் செலவை அரசு ஏன் ஏற்கவில்லை என்ற கேள்வி யதார்த்தமாக எழுகிறது.
உதாரணத்திற்கு, ஏர்ஆசியாவின் சிறப்பு விமான சேவையின் வழி ஈரானில் சிக்கிக் கொண்ட 46 மலேசியர்களை நேற்று மலேசிய அரசு மீட்டுக் கொண்டு வந்தது.
கோவிட் -19 தொற்று நோய் பேரிடர் சேவைக்காக மலேசிய அரசு ஆரம்பித்துள்ள எச்.ஏ.டி.ஆர்.எனப்படும் மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் உதவி (ழரஅயnவையசயைn ஹளளளைவயnஉந யனே னுளையளவநச சுநடநைக) நடவடிக்கையின் வழி
இந்த சிறப்பு விமானம் அமர்த்தப் பட்டுள்ளது.
இந்த விமானத்தில் பயணித்த வர்களில் மேற்குறிப்பிட்ட 46 பேரைத்தவிர சிங்கப்பூரைச் சேர்ந்த 8 பயணிகளும், இந்தோ
னேசியாவைச் சேர்ந்த ஒரு பயணியும், 5 சுகாதார அமைச்சு அதிகாரிகளும், 2 வெளி
யுறவு அமைச்சு அதிகாரிகளும் அடங்குவர்.
மலேசிய அரசாங்
கம் வழங்கிய இந்த உதவிக்கு
சிங்கப்பூர் அரசு புத்ராஜெயாவிற்கு நன்றி கூறியுள்ளது.
மலேசியா அரசு வழங்கியுள்ள இந்த மனிதாபிமான சேவை மிகவும் பாராட்டுக்குரியது. இது
பேரிடர் காலத்தில் தேவையற்று சிக்கித்தவிக்கும் மக்களுக்கு ஒரு கடப்பாடு உள்ள அரசாங்
கம், மனிதாபிமானமுள்ள அண்டைநாடு ஆனால், செய்ய வேண்டிய கடமை. இதற்காக எந்த அரசியல் கட்சிகளும் குரல் கொடுக்கத் தேவையில்லை.
ஆனால், இந்தியாவில் சிக்கிய பயணிகளுக்கு உதவ வேண்டி மஇகா கோரிக்கை முன் வைத்தது ஒரு புறம் இருக்க அதே ஏர்ஆசியா விமான வழி கொண்டு வருவதற்கான 10 லட்சம் வெள்ளி செலவையும் மஇகா ஏற்றுக் கொண்டுள்ளது என்ற அறிவிப்பு வேதனை அளிக்கிறது.
இந்த பேரிடர் காலத்தில் மலேசிய இந்திய வர்த்தகர்கள் அதிக பட்ச நஷ்டத்தையும், துன்பத்தையும் அனுபவித்து வருகின்றனர். அன்றாட தொழிலாளர்கள் வருமானம் இன்றி தவிக்கின்றனர். இவ்வேளையில் அவர்களுக்கு அதிக பொருள் மற்றும் பண உதவி தேவைப்படுகின்றது. அவர்களுக்கு உதவ வேண்டிய தொகை விமான பயணத்திற்காக பெற்று அளிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் சிக்கிக் கொண்டவர்கள் மலேசியாவிற்கு பாதுகாப்பான நிலையில் வந்து சேர்ந்தது மகிழ்ச்சியளிக்கும் ஒரு தகவல் என்றாலும் அரசாங்கம் ஏற்க வேண்டிய செலவை மக்கள் குறிப்பாக இந்திய மக்கள் ஏற்க வேண்டிய நிலை ஏற்பட்டது ஏன் என்பதற்கு பொறுப்பான பதிலை இந்த அரசாங்கம் அல்லது மஇகா சார்பில் அரசாங்கத்தில் இருக்க கூடியவர்கள் விளக்கம் அளிக்க வேண்டும் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

16 + fourteen =