பனைக் குளம் சங்கத்தின் பொது கூட்டம், குடும்ப தின விழா

0

அண்மையில் பூச்சோங் ’ஸ்பேஸ்ருபிஸில் எனும் இடத்தில் மலேசிய பனைக் குளம் சங்கத்தின் பொது கூட்டமும், குடும்ப தின விழாவும் மிக சிறப்பாக நடைபெற்றது.
இதற்கு ஆயிரத்திற்கு மேற்பட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இதில் 2018 ஆம் ஆண்டில் யூபிஎஸ்ஆர், பிடி 3 மற்றும் எஸ்பிஎம் சிறப்புத் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு சிறப்பு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இந்த நிகழ்ச்சியில் ஐக்கிய ஜமாத்தை சேர்ந்த தலைவர்களும், பெர்மிம் பேரவை தலைவர் பிரெஸ்மா தலைவர் மிம்காய்ன் தலைவர் மற்றும் அரசு சாரா இயக்கத்தை சேர்ந் தவர்களும் கலந்து கொண்டனர்.
நீதிபதி டத்தோ வாஸீர் ஆலம் அவர்களுக்கு வாழ் நாள் சாதனை யாளர் விருது வழங்கப்பட்டது.
தலைவராக மீண்டும் ஹாஜி அன்வார் ஹூசேன் தேர்ந் தெடுக்கப்பட்டார். இளைஞர் பிரிவும் மகளிர் பிரிவும் தோற்றுவிக்கப்பட்டது.
அதிர்ஷ்ட குலுக்கல் நடைபெற் றது பத்து ஆயிரம் வெள்ளி பெறுமான முள்ள மணமகள் அலங்கார பற்றுச் சீட்டு 5,000 வெள்ளி, 3,000 வெள்ளி, 2,000 வெள்ளி , சங்கிலிகள், தொலைக்
காட்சிப் பெட்டிகள், கைத்தொலைபேசிகள், மடிக் கணினிகள் ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தி அனைவரின் பாராட்டையும் பெற்றார் முகமது ஹசான்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் ஏற்பாட்டாளர் நன்றி கூறிக் கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ten + one =